🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

துபாய் மெட்ரோவின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவில்; நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்

துபாய் மெட்ரோ தனது 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவை, வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி விமர்சியாக கொண்டாட பல்வேறு முன்னெடுப்புகளை RTA மேற்கொண்டுவருகிறது.

இதனை முன்னிட்டு பல இடங்களில் சிறப்பு நிகழ்வுகளையும்,15 ஆம் ஆண்டை பிரதிபலிக்கும் விதமாக பல நினைவு சின்னங்களையும் பொதுமக்களுக்கு காட்சி படுத்தவும், வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீங்கள் மெட்ரோவின் 15ஆம் ஆண்டு விழாவில் எதிர்பார்க்கக்கூடியவை

  • எமிரேட்ஸ் அஞ்சல் துறை வெளியிடும் சிறப்பு அஞ்சல் முத்திரைகள்.

  • Lego Middle East மற்றும் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா சின்னத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட தனித்துவமான Nol கார்ட்.

  • Al Jaber கேலரியில் மெட்ரோவுடன் தொடர்புடைய பிரத்தியேக நினைவுப் பொருட்கள்.

  • செப்டம்பர் 21, 2024 அன்று Legoland துபாயில் நடக்கவிருக்கும் ‘மெட்ரோ பேபீஸ்’ (2009 முதல் 2023 வரை செப்டம்பர் 9 ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்காக) நிகழ்ச்சி கொண்டாட்டம்.

  • பதிவு செய்ய விரும்புவோர் RTA இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

  • மெட்ரோ வடிவில் உருவாக்கப்பட்ட Igloo ஐஸ்கிரீம்கள் விற்பனைக்கு வரவுள்ளது.

  • செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27 வரை மெட்ரோ நிலையங்களில் எமிராட்டிய மற்றும் சர்வதேச இசைக்கலைஞர்கள் கலந்து கொள்கிற 4வது துபாய் மெட்ரோ இசைக்கச்சேரி, Brand Dubai மூலம் நடத்தப்படும்.