செயற்கைக்கோள் டிஷ் விதி மீறல் மற்றும்  அனுமதியின்றி சுவரொட்டிகளை  ஒட்டும் குற்றங்களுக்கு அபுதாபி எச்சரிக்கை! 

அபுதாபி நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை (DMT),  சட்ட எண் 2 இன் 2012 இன் படி, சட்டவிரோதமாக அல்லது அனுமதி இல்லாமல் செயற்கைக்கோள் டிஷ்கள் நிறுவுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோன்று பொது இடங்களில் அனுமதியின்றி துண்டு பிரசுரங்கள் (flyers) அல்லது சுவரொட்டிகள் (posters) ஒட்டுவதற்கு எதிராக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அபுதாபி தெருக்களின் ஒழுங்கையும் தூய்மையையும் பேணுவதற்காக, ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டு அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தால்  அபராதத் தொகை உடனடியாக இரட்டிப்பாக்கப்படும்.

எந்தவொரு துண்டு பிரசுரம் அல்லது சுவரொட்டியை பொது இடங்களில் ஒட்டுவதற்கு முன்பு நகராட்சியின் அனுமதி பெறவேண்டியது கட்டாயம்.

விதி மீறல்களுக்கான அதிகமாக்கப்பட்ட அபராதம் :

கட்டிடங்கள், பால்கனிகள் அல்லது சுவர்களில் அனுமதியின்றி அல்லது தவறான முறையில் டிஷ் அமைத்தல், அங்கீகரிக்கப்படாத துண்டு பிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகளை ஒட்டுவது, குடியிருப்பாளர்கள் முறையற்ற இடங்களில் குப்பைகளை  கொட்டுவது  போன்றவவையும் இதில் அடங்கும்.

  •    முதல் மீறலுக்கு AED 1,000
  •    இரண்டாவது முறை AED 2,000
  •    மீண்டும் மீண்டும் குற்றங்கள் செய்தால் AED 4,000

கூரைகள் மற்றும் பால்கனிகளில் பொருட்கள் வைக்கவும் கட்டுப்பாடு:

அபுதாபி நகராட்சியின் புதிய விதிமுறைகளின்படி, மொட்டை மாடிகள் (rooftops) மற்றும் பால்கனி (பழைய தளபாடங்கள், கட்டுமானக் கழிவுகள், பொதுவான குப்பை ) போன்ற இடங்களில் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், தேவையற்ற பொருட்களை சேமித்து வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • முதல் முறை மீறல்: AED 500 அபராதம் விதிக்கப்படும்.
  • இரண்டாவது முறை மீறல்: அபராதத் தொகை AED 1,000 ஆக அதிகரிக்கும்.
  • தொடர்ச்சியான மீறல்கள்: மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்தால், அபராதம் AED 2,000 ஆக உயரும்.

நகர தூய்மை மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது:

அபுதாபி நகரத்தின் தூய்மை, ஒழுங்கு மற்றும் அழகிய தோற்றத்தை பாதுகாக்கும் நோக்கத்தில், நகராட்சி மற்றும் போக்குவரத்து துறை (DMT) இவ்விதிமீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அபுதாபியின் உலகத் தரம் வாய்ந்த நற்பெயரை நிலைநிறுத்த குடியிருப்பாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வணிகங்கள் இந்தச் சட்டங்களுக்கு இணங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TAGGED: