உலகின் பழமை வாய்ந்த அழகிய கப்பல் என பெயர் போன அமெரிகோ வெஸ்புச்சி கப்பல் எப்படி உருவானது, இதற்கு அமெரிகோ வெஸ்புச்சி என பெயர் பெற்றது எப்படி என முழு தகவல்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
இத்தாலிய கடற்படையின் வரலாற்று சிறப்புமிக்க பாய்மரக் கப்பல் மற்றும் பயிற்சிக் கப்பலான Amerigo Vespucci கப்பலை இத்தாலிய கடல் பயணி கண்டுபிடிப்பாளரான அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரில் உருவாக்கப்பட்டது தான் Amerigo Vespucci கப்பல்.
யார் இந்த அமெரிகோ வெஸ்புச்சி?

1454 ஆம் ஆண்டு மார்ச் 9-இல் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பிறந்தவர். பிரபலமான மெடிசி குடும்பத்திற்காக பணிபுரிந்த ஒரு வங்கியாளரின் மகன் ஆவார். சிறு வயதில் அமெரிகோ வெஸ்புச்சி பள்ளிக்கூடம் சென்றதில்லை. தனிப்பட்ட முறையில் தன் உறவினர்களிடமிருந்து பாடங்களை கற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் தந்தையின் வேலையை கவனித்து வந்த அமெரிகோ அதன் பின்னர், மற்ற பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். சொல்லப்போனால், அமெரிகோ வெஸ்புச்சி அறிந்தவர்கள் அனைவரும் இந்தக் கேள்வியை அவரிடம் ஒரு முறையாவது கேட்டிருப்பார்கள். அப்படி என்னவென்றால், ஒரு வேலையில் அப்போதுதான் சேர்ந்திருப்பார். அடுத்த முறை பார்க்கும்போது, இன்னொரு வேலையில் இருப்பார்.
இப்படி உலகம் முழுவதும் சுற்றி திரிந்த அவர், 45 வயதில் கடல் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். இனி கடல்தான் என் வாழ்க்கை என்று அவர் அறிவித்தபோது, நண்பர்கள் நம்பவில்லை. இன்னும் சில மாதங்களில் கப்பலை மறந்துவிட்டு வேறு வேலையில் இருக்கப்போகிறாய் என்றார்கள். அதைப் பொய்யாக்கினார் அமெரிகோ. கடல் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாக வெகு சீக்கிரத்திலேயே முக்கியமான கடல் பயணியாக மக்களிடம் அங்கீகாரம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, கரீபியன் தீவுகள் அவரை கவர்ந்திட, கிழக்கிந்தியத் தீவுகள் குறித்தும் இந்தியா குறித்தும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத பகுதிகள் குறித்தும் கனவு காண ஆரம்பித்தார்.
அமெரிக்காவின் கண்டத்தை கண்டுப்பிடித்தார் அமெரிகோ
இந்த நிலையில், கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டில் அமெரிக்காவை கண்டுபிடித்தாக தெரிவித்தார். ஆனால், கொலம்பஸ் கண்டுபிடித்தது அமெரிக்காவை அல்ல பகாமாஸ் தீவை தான் என கிறிஸ்டோபர் கொலம்பஸின் தவறை சுட்டிக்காட்டி காட்டினார்.
எனவே, அமெரிக்கா என்று இன்று அழைக்கப்படும் பிரதேசம் கண்டமல்ல, அவை இரண்டாக பிரிந்து கிடக்கிறது என்று முதன் முதலாக அறிவித்து அடையாளப்படுத்தினார். அதில், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா தனி தனி பிரதேசம் என்றும் கூறினார். இவர் கூறியது, சரியென நம்பிய ஸ்பெயின் அரசர் ஃபெர்டினாண்ட், நிச்சயம் இவரால் சாதிக்க முடியும் என நம்பினார்.
இதனால், அமெரிகோவின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்தது. தன்னுடைய கடல் பயணங்கள் மூலம் தொடர்சியாக புதுமையான விஷயங்களை கற்றுக்கொண்டு வந்தார். அதன் அனைத்தையும் மக்களிடம் பகிர்ந்தும் வந்தார். இதனால், அமெரிகோவை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்பவும் மதிக்கவும் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் அமெரிகோவை விட்டால், இந்த உலகைப் புரிந்துகொள்ள வேறு வழியே இல்லை என்ற அளவிற்கு மக்கள் உயர்வான இடத்தை அளித்து மரியாதை செலுத்தினார்கள். இதனால், அமெரிகோவும் புதுமையான விஷயங்களை கண்டுபிடித்தார். வரைபடங்களைத் திருத்தினார். புதிய வரைபடங்களை உருவாக்கினார். கடல் பயணத்தை மேலும் துல்லியமாக, அறிவியல்பூர்வமாக மாற்றமுடியுமா என்று ஆராய்ந்தார்.

இதனால், அமெரிகோ புகழ் பரவ 1507 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாளிலே வெளிவந்த வரைப்படத்தில் தான் முதல் முறையாக அமெரிக்கா என்னும் பெயர் பயன்படுத்தப்பட்டது. ஆம், வெஸ்புச்சி உள்ளூர் மக்களின் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து, தென் அமெரிக்காவின் உள் பகுதிகளை வரைபடமாக்கி, பல தீவுகளையும் ஆறுகளையும் கண்டுபிடித்தார். இதனால், அவர் பெயரை சூட்டுவது தான் சரி என வரைப்படத்தை உருவாக்கிய ஜெர்மனியார் நினைத்தார். இதனால், அமெரிக்கா என்பது ஒரு கண்டமல்ல இரண்டு கண்டம் என கண்டுபிடித்தவர் அமெரிகோ என்பதால் அவரின் பெயர் நிலைத்து நின்றது.
அதற்கு பிறகும், தொடர்ந்து அமெரிகோ பல பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டார். முக்கியமாக கொலம்பஸின் கப்பல்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட பலரில் அமெரிகோவும் ஒருவர். கொலம்பஸின் பயண குறிப்புகள் அமெரிகோவை கவர்ந்தன. அதுமட்டுமின்றி, அமேசான் ஆறு கூட அமெரிகோவால் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதேபோல், 2012 ஆம் ஆண்டு நாணயங்களிலும் அவர் உருவமும், சொந்த நகரமான புளோரன்ஸில் அவரது சிலையும் வைக்கப்பட்டது.
Amerigo Vespucci கப்பல் உருவான கதை
1930 ஆம் ஆண்டு இத்தாலி கடற்படையால், காஸ்டெல்லாம்மரே டி ஸ்டேபியாவின் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு மர போர்க்கப்பலைப் போல இத்தாலி ஒரு கப்பலை உருவாக்கியது. இந்த கப்பலுக்கு அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரை சூட்டிய இத்தாலிய அரசு பிப்ரவரி 22, 1931 இல் ஜூன் மாதம் ஒரு பயிற்சிக் கப்பலாக சேவையை தொடங்கியது. 15-ஆம் மற்றும் 16-ஆம் நூற்றாண்டில் முதலில் நாவிகேஷன் தொழில்நுட்பத்தை பிரதிபலித்தது.
அந்த காலத்தில், கப்பல்கள் பொதுவாக தட்டையான வடிவத்தில் இருந்தன. ஆனால், இந்த கப்பல் கடல் பயணங்களை எளிதாக மேற்கொள்ள மற்றும் வேகமாக செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும், இந்த கப்பல், 1500-களில், புது கண்டங்களை கண்டுபிடிக்க உதவியது. எளிதில் நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கப்பல் பல இடங்களில் தானாக மூழ்காமல், சரியான பாதையில் பயணித்தது.
கப்பலின் சிறப்பு அம்சங்கள்
மேலும், இந்த அழகிய கப்பலில் மூன்று மிகப்பெரிய பாய்மரங்களுடன், உள்ளே அதிநவீன வசதிகளுடன் வடிவமைத்தனர்.
இதன் நீளம் 101 மீட்டரும், எடை 4,200 டன் எடையுடனும் மின்சாரத்திலும் டீசலிலும் இயங்கும் இயந்திரமும் இதில் பொருத்தப்பட்டு உருவாக்கினர்..
பழங்கால முறைப்படி பாய்மரங்களின் உதவியுடன் கடலில் இக்கப்பல் பயணம் செய்யும்.
இந்த கப்பலில் பழங்கால ஆயுதங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் பொது மக்களின் பார்வைக்கு இன்றளவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கப்பலில் கடலோடிகளுக்கு மூன்று மாதம் பயிற்சி

இத்தாலியக் கடற்படையின் வருங்காலக் கடலோடிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தாலியக் கடற்படைக் கழகத்தில் ஓராண்டை நிறைவுசெய்தோர் இக்கப்பலில் மூன்று மாதப் பயிற்சியை மேற்கொள்வர். பயிற்சிக் கப்பலில் சுமார் 264 ராணுவ வீரர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கேடட்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் உட்பட சுமார் 400 பணியாற்றுகின்றனர்.
நற்பெயர் பெற்ற வெஸ்புச்சி கப்பல்
இந்த பழமை வாய்ந்த அழகிய கப்பலை 2007 ஆம் ஆண்டில் யுனிசெஃப் நல்லெண்ண தூதராக பயன்படுத்தப்பட்டது. அதன்படி, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது உட்பட, உலகம் முழுவதும் உள்ள அதன் தூதரக பணிகளின் காரணமாக மிதக்கும் இத்தாலிய தூதரகம் என்ற நற்பெயரையும் பெற்றது.
இதனால், பல ஆண்டுகளாக இது உலகின் மிக அழகான கப்பல் என்ற பெயரைப் பெற்றுள்ளது. 93 ஆண்டுகளுக்கும் மேலாக கடற்படை பாரம்பரியம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படும் இந்த அழகிய கப்பல் இத்தாலிய கடற்படையின் பயிற்சிக் கப்பலாகவும் செயல்படுகிறது.
2023 முதல் 2025 உலக சுற்றுப்பயணம்
2023 முதல் 2025 உலகம் முழுவதும் பயணம் செய்து, 30 துறைமுகங்கள், 28 நாடுகள், 5 கண்டங்களுக்குச் செல்கிறது. இதன் வரலாற்று சிறப்புகளை மக்கள் தெரிந்து கொள்ள உலக பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த இத்தாலிய அழகிய கப்பல் ஆனது தென் அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ், சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியா, கத்தார், மும்பை போன்ற புகழ்பெற்ற உலகச் சுற்றுப்பயணத்திற்கு பிறகு அபுதாபியை வந்தடைந்தது. விரைவில் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தாவிற்கும் ஜனவரியில் ஓமன் நாட்டிற்கும் செல்கிறது.
அபுதாபியில் களமிறங்கிய வெஸ்புச்சி
டிசம்பர் 27 ஆம் தேதி அபுதாபி குரூஸ் டெர்மினல் சயீத் துறைமுகத்திற்கு வந்தடைந்த வெஸ்புச்சி கப்பல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இலவசமாக பங்கேற்கவும் அனுமதியை வழங்கி இருந்தது.
பலவிதமான இசை கச்சேரி, நிகழ்ச்சிகள் நடைபெற்றன
இதில், இத்தாலிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமா Guardia di Finanza இசைக்குழுவின் நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் மற்றும் சமையல் நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக நடைபெற்று இருக்கின்றன.
மேலும், கடைசிய நாளாக டிசம்பர் 31 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணியோடு இந்நிகழ்ச்சிகள் நிறைவடைந்து இருக்கிறது.
அமெரிகோ வெஸ்புஸ்ச்சியை பார்வையிட்ட இளவரசர்
துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோவை அமெரிகோ வெஸ்புச்சி கப்பலில் சந்தித்தார்.
அன்புடன் துபாய் இளவரசரை வரவேற்ற இத்தாலி பாதுகாப்பு அமைச்சர், வெஸ்புச்சியின் கப்பலை சுற்றிக் காட்டினார்.
மேலும், இத்தாலி இடையே வளர்ந்து வரும் உறவு, சர்வதேச பாதுகாப்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து துபாய் இளவரசர் ஆலோசனை நடத்தினார்.
இந்த அழகிய கப்பலை பார்வையிட முன்பதிவு செய்ய வேண்டும்
இந்த அழகிய கப்பலில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்வையிடவும், மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும், விரும்புவோர் https://tourvespucci.it/ என்ற இணையப் பக்கத்திற்குச் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
