துபாய் மெட்ரோவில் சிவப்பு மற்றும் பச்சை வழித்தடங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது அமைக்கப்பட்டு வரும் நீலம் மற்றும் கோல்டன் வழித்தடங்களில் இடம்பெறவுள்ள நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
துபாய் மெட்ரோ தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய வழித்தடங்களை அமைத்து வருகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள சிவப்பு மற்றும் பச்சை வழித்தடங்களுடன், அடுத்த சில ஆண்டுகளில் நீலம் மற்றும் கோல்டன் என இரண்டு புதிய வழித்தடங்கள் அறிமுகமாக உள்ளன.
இதில், நீல வழித்தடம் 2029-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதைத் தொடர்ந்து, கோல்டன் வழித்தடம் 2032-ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பாதைகளில் மொத்தம் 29 புதிய மெட்ரோ நிலையங்கள் அமையவிருக்கிறது.
நீல வழித்தடத்தின் 11 மெட்ரோ நிலையங்கள்
Academic City: 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பல்கலைக்கழக பகுதி.
Al Jaddaf: நீல வழித்தடத்தின் முதலாவது பாதை கிரீக் நிலையத்திலிருந்து தொடங்கும். இது பச்சை வழித்தடத்துடன் நேரடியாக இணையும் Interchange நிலையமாகவும்.
Al Rashidiya: சிவப்பு வழித்தடத்தின் தற்போதைய Center Point நிலையம் தகவமைக்கப்பட்டு நீல வழித்தடத்துடன் இணைக்கப்படும்.
Al Warqa: சுமார் 60,000 மக்கள் வாழும் பகுதி மற்றும் துபாய் சஃபாரி பூங்காவிற்கு இணைப்பு வழங்கும் நிலையம்.
Dubai Creek Harbour: உலகின் மிக உயரமான மெட்ரோ நிலையமாக Emaar Properties நிலையம் இங்கு அமைக்கப்படவுள்ளது.
Dubai Festival City: புகழ்பெற்ற ஷாப்பிங் மால் மற்றும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் நிலையம்.
Dubai International Airport: நீல வழித்தடத்தின் மூலம் விமான நிலையத்தை வெறும் 20 நிமிடங்களில் சென்றடைய முடியும்.
Dubai Silicon Oasis: தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த பகுதி.
International City: Dragon Mart அமைந்துள்ள இப்பகுதியில் மொத்தம் 3 புதிய மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
Mirdif: அல் முஷ்ரிஃப் பூங்கா மற்றும் மிர்டிஃப் சிட்டி சென்டர் மால் பகுதியை இணைக்கும் நிலையம்.
Ras Al Khor: வனவிலங்கு சரணாலயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் நிலையம்.
கோல்டன் வழித்தடத்தின் 18 மெட்ரோ நிலையங்கள்
Al Ghubaiba Interchange: கோல்ட் வழித்தடத்தின் தொடக்க நிலையம் மற்றும் பச்சை வழித்தடம் மற்றும் பேருந்து நிலையத்துடன் இணைகிறது.
Al Mina Street: எதிஹாட் அருங்காட்சியகம் மற்றும் போர்ட் ரஷீத் முனையத்திற்கு அருகில் அமையவுள்ளது.
Al Satwa near Satwa Bus Station: வரலாற்றுச் சிறப்புமிக்க சத்வா பகுதிக்கு முதன்முறையாக மெட்ரோ இணைப்பு கிடைக்கிறது.
Al Satwa Road: சத்வா பகுதியில் அமைக்கப்படும் இரண்டாவது நிலையம்.
City Walk: ஓபன்-ஏர் ஷாப்பிங் மால், கோகோ கோலா அரினா மற்றும் பிரபலமான உணவகங்கள் உள்ள பகுதி.
Business Bay Interchange: சிவப்பு வழித்தடத்துடன் இணையும் மற்றொரு முக்கியமான Interchange நிலையம்.
Burj Khalifa Road: டவுன்டவுன் துபாயில் சிவப்பு வலித்தடத்தின் நெரிசலைக் குறைக்க உதவும் கூடுதல் நிலையம்.
District 1: முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சிட்டியில் அமைக்கப்படும் முதலாவது நிலையம்.
District 1 South: டிஸ்ட்ரிக்ட் 1 பகுதியில் அமைக்கப்படும் இரண்டாவது நிலையம்.
Nad Al Sheba: நாத் அல் ஷெபா மால் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதி.
Dubai Hills: துபாய் ஹில்ஸ் மால் மற்றும் கோல்ஃப் கோர்ஸ் உள்ள பகுதி.
Global Village: ஆண்டுதோறும் 10 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வரும் சுற்றுலாத் தலத்திற்கு நேரடி மெட்ரோ இணைப்பு.
Future Meydan Etihad Rail Interchange: மேடான் ரேஸ்கோர்ஸ் மற்றும் எதிஹாட் ரயிலுடன் இணையும் நிலையம்.
Hadaeq Mohammed Bin Rashid: 70-க்கும் மேற்பட்ட பூங்காக்கள் கொண்ட பசுமை குடியிருப்பு பகுதி.
Dubai Miracle Garden: உலகின் மிகப்பெரிய மலர் பூங்காவிற்கு மெட்ரோ இணைப்பு.
Jumeirah Village Circle: மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற குடியிருப்பு பகுதி.
Dubai Production City: ஊடக உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிட்டி சென்டர் மெயைசம் உள்ள பகுதி.
Jumeirah Golf Estates Interchange: சிவப்பு வழித்தடம் மற்றும் எதிஹாட் ரயிலின் பயணியர் முனையத்துடன் இணையும் கோல்ட் வழித்தடத்தின் இறுதி நிலையம்.
