துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ஆகஸ்ட் 29 முதல் புதிய பேருந்து சேவைகளைத் தொடங்குகிறது.
துபாயின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்தவும், குடியிருப்பாளர்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஆகஸ்ட் 29 முதல் ஐந்து புதிய பொதுப் பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்துகிறது. மேலும் தற்போதுள்ள ஒன்பது வழித்தடங்களை மேம்படுத்துகிறது.
புதிய பேருந்து வழித்தடங்கள்
இந்த புதிய பேருந்து சேவைகள் துபாயில் முக்கிய இடங்களை இணைத்து, பயணத்தை விரைவாகவும் வசதியாகவும் மாற்றும்.
Route 31:
துபாய் அவுட்சோர்ஸ் சிட்டி (Dubai Outsource City) முதல் துபாய் சிலிக்கான் ஓயாசிஸ் (Dubai Silicon Oasis) வரை செல்லும்.
இந்த வழித்தடம், இரு பகுதிகளுக்கு இடையே விரைவான இணைப்பை ஏற்படுத்தும். உச்சகட்ட நேரங்களில் (peak Hours) ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.
Route 62A:
ஏற்கனவே இருந்த Route 62 வழித்தடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அல் குசைஸ் இண்டஸ்ட்ரியல் ஏரியா (Al Qusais Industrial Area) முதல் அல் குசைஸ் மெட்ரோ நிலையம் (Al Qusais Metro Station) வரை செல்லும்.
Route 62B:
அல் குசைஸ் மெட்ரோ நிலையம் (Al Qusais Metro Station) மற்றும் ராஸ் அல் கோர் (Ras Al Khor) முதல் சமாரி ரெசிடென்சஸ் வரை செல்லும்.
உச்ச நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும்.
Route F26A:
ஆன் பாசிவ் பேருந்து நிலையம் (Onpassive Bus Station) முதல் அல் குவாஸ் இண்டஸ்ட்ரியல் ஏரியா 4 (Al Quoz Industrial Area 4) வரை செல்லும்.
இந்த வழித்தடம் அல் குவாஸ் இண்டஸ்ட்ரியல் பகுதிக்குள் பயணிக்க வசதியாக இருக்கும். உச்ச நேரங்களில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.
Route X91:
அல் குபைபா பேருந்து நிலையம் (Al Ghubaiba Bus Station) முதல் ஜெபல் அலி பேருந்து நிலையம் (Jebel Ali Bus Station) வரை செல்லும் விரைவுப் பேருந்து சேவை.
இது தற்போதுள்ள Route 91-ஐப் போன்றது, ஆனால் பிசினஸ் பே மெட்ரோ நிலையத்தில் நிற்காது. அல் குபைபா பேருந்து நிலையம் மற்றும் பிசினஸ் பே மெட்ரோ நிலையம் இடையே பயணிக்க, மாற்றி அமைக்கப்பட்ட Route 91-ஐ பயன்படுத்தலாம்.
மேம்படுத்தப்பட்ட வழித்தடங்கள்:
Route 7:
அல் குவாஸ் பேருந்து நிலையம் மற்றும் அல் சத்வா பேருந்து நிலையம் இடையே இரு திசைகளிலும் சேவை வழங்கும்.
Route 91:
அல் குபைபா பேருந்து நிலையம் முதல் பிசினஸ் பே மெட்ரோ நிலையம் வரை செல்லும் வகையில் சுருக்கப்பட்டுள்ளது.
Route F62:
எமிரேட்ஸ் மெட்ரோ நிலையம் மற்றும் நத் அல் ஹமர் இடையே இரு திசைகளிலும் சேவை வழங்கும்.
Route 77:
பனியாஸ் ஸ்கொயர் மெட்ரோ நிலையம் மற்றும் அல் கர்ஹுத் இருவழி சேவையாக மாற்றப்பட்டுள்ளது.
Route X25:
அல் கராமா பேருந்து நிலையம் முதல் துபாய் சிலிக்கான் ஓயாசிஸ் வரை செல்லும் வகையில் சுருக்கப்பட்டுள்ளது.
Route 50:
துபாய் அவுட்சோர்ஸ் சிட்டிக்குச் செல்லாது. இண்டர்நேஷனல் சிட்டியில் மாற்றங்கள் இரண்டாம் கட்டத்தில் செய்யப்படும்.
Route 21A:
அல் குவாஸ் பேருந்து நிலையம் முதல் அல் குபைபா பேருந்து நிலையம் வரை செல்லும் வகையில் சுருக்கப்பட்டுள்ளது.
Route 21B:
அல் குபைபா பேருந்து நிலையம் முதல் அல் குவாஸ் பேருந்து நிலையம் வரை செல்லும் வகையில் சுருக்கப்பட்டுள்ளது.
Route J01:
ஜூமேரா வில்லேஜ் சர்க்கிளுக்குள் செல்லும் பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான அர்ப்பணிப்பு:
பேருந்து சேவை மேம்பாடு குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி கூறுகையில், “துபாயின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை ஆதரிப்பதற்காக, எமிரேட்டின் மக்கள்தொகை வளர்ச்சி, நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு ஏற்ப, பொதுப் பேருந்து சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் RTA தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.
துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் கடல் போக்குவரத்து அமைப்புகளுடன் பேருந்து சேவைகளை ஒருங்கிணைத்து, பொதுப் போக்குவரத்து வலையமைப்பை விரிவுபடுத்துவதே RTA-வின் நோக்கம். பல்வேறு போக்குவரத்து முறைகளுக்கு இடையே இணைப்பை மேம்படுத்துவதன் மூலம், துபாய் முழுவதும் பயணிக்க பொதுப் போக்குவரத்து சிறந்த தேர்வாக மாறும்” என்று அவர் தெரிவித்தார்.
