🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

ரமலான் மாதத்தில் 6 மணிநேரம் மட்டுமே பள்ளிகள் செயல்பட வேண்டும் – SPEA அறிவிப்பு!

ரமலான் மாதத்தில் ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளிகள் தினமும் 6 மணி நேரம் மட்டுமே இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ற நேர அட்டவணையை தயாரிக்க தனியார் பள்ளிகளுக்கு ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

புனித ரமலான் மாதத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் (SPEA) வெளியிட்டுள்ளது.

  • ஒரு பள்ளி நாளின் மொத்த வேலை நேரம் 6 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
     
  • ஷார்ஜாவில் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வேலை நேரத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
  • ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை, ஒவ்வொரு நிலையின் கல்வித் தேவைகளுக்கும் ரமலான் மாதத்தின் சிறப்பு தன்மைக்கும் இடையே சமநிலையை உறுதி செய்ய வேண்டும்.

SPEA வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி:

பள்ளிகள் தங்கள் பாடத்திட்டம் மற்றும் SPEA அங்கீகரித்த கல்வி நாட்காட்டிக்கு (Academic Calendar) ஏற்ப பள்ளி ஆரம்பம் மற்றும் நிறைவு நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்கள் கற்றல் செயல்பாட்டில் எந்த தடங்கலும் ஏற்படாமல், அதன் தரம் மற்றும் செயல்திறனை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மாணவர்களின் கல்வி மற்றும் உளவியல் தேவைகளை கருத்தில் கொண்டு, நியாயமான மற்றும் நெகிழ்வான முறையில் பள்ளி நாளை ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புனித மாதத்தின் மனிதாபிமான மற்றும் சமூக விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கல்விச் சமூகத்தின் சூழலை கருத்தில் கொண்டு செயல்படுமாறு பள்ளிகளை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

கல்வித் தேவைகளுடன் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைச் சமநிலைப்படுத்துவதில் SPEA தனது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.