மருத்துவ காப்பீடு முதல் திருமண நிதியுதவி வரை; தமிழக அரசின் நலத்திட்டங்களை வழங்கும் NRT அட்டை; பெறுவது எப்படி?

வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களை தமிழக அரசுடன் இணைக்கும் நோக்கில், அயலகத் தமிழர் நல வாரியம் சிறப்பு அடையாள அட்டையை (NRT ID Card) வழங்கி வருகிறது. 

இந்த அடையாள அட்டை மூலம் விபத்துக் காப்பீடு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, ஓய்வூதியத் திட்டம் மற்றும் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைப் பெறலாம்.

வெளிநாடு வாழ் தமிழர் அட்டை

வெளிநாடுகளிலோ அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியிலோ வாழும் தமிழர்களை, தமிழ்நாடு அரசுடன் இணைக்கும் ஒரு முக்கிய பாலமாக NRT ( Non-Resident Tamils)  அடையாள அட்டை செயல்படுகிறது. “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற இந்த அட்டை மிகவும் அவசியமாகும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்?

தகுதி: தமிழ்நாட்டிற்கு வெளியே அல்லது வெளிநாட்டில் வாழும் தமிழராக (Non-Resident Tamil) இருக்க வேண்டும்.

பிற மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் தமிழர்கள், வெளிநாட்டில் வசிப்போர் குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும் விசா வைத்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு: 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் (ஏதேனும் ஒன்று):

  • இந்திய பாஸ்போர்ட் (வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு இது கட்டாயமாகும்)
  • ஆதார் அட்டை
  • இந்திய ஓட்டுநர் உரிமம் (Driving Licence)
  • வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
  • பான் அட்டை (PAN Card)

பல்வேறு உதவிகள்:

  • நிதி உதவி
  • மருத்துவக் காப்பீடு மற்றும் சுகாதார உதவி
  • கல்வி உதவித்தொகை
  • திருமண உதவி
  • ஓய்வூதியம் (Pension) உள்ளிட்ட பல சலுகைகள் இந்த அட்டையின் மூலம் பெறலாம்.

    இந்த அட்டையை வைத்திருக்கும் தமிழர்கள், ரூ.10 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடு மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டை பெற முடியும். 

அடையாளச் சான்று: 

அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கு இந்த NRT அடையாள அட்டை ஒரு அதிகாரப்பூர்வ தகுதிச் சான்றாகச் செயல்படும்.

செல்லுபடி காலம் & கட்டணம்:

இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க (Renew) வேண்டும். முதன்முறையாக விண்ணப்பிக்கும் போது ஒரு அட்டைகான கட்டணம் ரூ. 200/- மட்டுமே.

விண்ணப்பிக்கும் முறை 

  • nrtamils.tn.gov.in என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  •  “ID Card Registration” பிரிவைத் தேர்ந்தெடுத்து, பெயர், மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்ணைப் பதிவு செய்யவும்.  
  • பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் விவரங்கள், வெளிநாட்டு/மாநில முகவரி மற்றும் தமிழ்நாட்டு முகவரி ஆகியவற்றைச் சரியாகப் பதிவிடவும்.  
  • தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் (Passport, Visa/Aadhaar) மற்றும் புகைப்படத்தைப் பதிவேற்றவும். 
  • அட்டையைப் பதிவு செய்வதற்கான ஒரு முறை கட்டணமான ₹200-ஐ (One-time fee) ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
  • உங்கள் விண்ணப்பத்தைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, இணையதளத்திலிருந்தே உங்கள் NRT ID கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TAGGED: