DXB-க்கு அருகேவுள்ள பேருந்து வழித்தடங்களில் தற்காலிக மாற்றங்களை கொண்டு வந்தது RTA.

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இயங்கும் சில பேருந்து வழித்தடங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்.

பிப்ரவரி 21 முதல் நடைமுறைபடுத்தப்பட்ட இந்த மாற்றங்கள், மறு அறிவிப்பு வரை இப்படியே தொடரும் எனவும் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்: 

Airport Terminal 1 Arrival bus stop-ல் சேவை

நிறுத்தப்பட்ட பேருந்து எண்கள்

Route 24: அல் நஹ்தா நிலையத்தை நோக்கி செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது, புதிய தற்காலிக நிறுத்த எண். 544501ஐ மாற்றாக பயன்படுத்தி கொள்ளலாம்.

Route 32C: அல் சத்வா நிலையத்தை நோக்கி செல்லும் பேருந்து வழித்தடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Route C01: அல் சத்வா நிலையத்தை நோக்கி செல்லும் பேருந்து வழித்தடம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Route 33: அல் கராமா நிலையத்தை நோக்கி செல்லும் பேருந்து வழித்தடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் மெட்ரோ ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் 1 (235001) ஐ மாற்றாக பயன்படுத்தலாம்.

Route N30: Airport Terminal 1 Arrival bus stop-ன் இரு திசைகளிலும் பேருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது, விமான நிலைய முனையம் 1 பார்க்கிங்கில் உள்ள பஸ் நிலையத்தை மாற்றாக பயன்படுத்தலாம்.

Route 77: முனையம் 3-ன் இரு திசைகளிலும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

TAGGED: