AI வசதியுடன் விரைவில் வர போகிறது மெகா ஷாப்பிங் மால்.. எங்கு? எப்போ தெரியுமா?

துபாயில் புதிதாக மெகா ஷாப்பிங் மால் ஒன்றை எமார் நிறுவனம் கட்டி வருகிறது. இதன் கட்டுமான பணிகள் 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும்.

துபாய் ஸ்கொயர் மால்: 

எமிரேட்ஸ் மால், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால், சிட்டி சென்டர் டெய்ரா, துபாய் மால் உள்ளிட்ட பல பிரபலமான மால்கள் துபாயில் முக்கிய அடையாளமாக திகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் நகரின் மற்றொரு அடையாளமாக துபாய் ஸ்கொயர் என்ற மாலும் புதிதாக இணைய உள்ளது. இந்த மாலை துபாயின் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான எமார் கட்டி வருகிறது.

துபாய் மெரினா மால், துபாய் மால், துபாய் ஹில்ஸ் மால் உள்ளிட்ட 6 மால்களை நிர்வகித்து வரும் துபாயின் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனமான எமார், தற்போது துபாய் ஸ்கொயர் என்ற புதிய மாலை க்ரீக் துறைமுகத்தில் கட்டி வருகிறது.

இதற்காக AED 180 பில்லியனை எமார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இது பிராந்தியத்தின் இரண்டாவது பெரிய ஷாப்பிங் மாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

சிறப்பம்சங்கள் 

எமார் நிறுவனத்தின் கூற்றுப்படி,  துபாய் ஸ்கொயர் மாலின் கூரைகள் மற்றும் விசாலமான கண்ணாடி ஜன்னல்கள் வழியாக இயற்கை ஒளி உள்ளே வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாலின் உட்புறம் பசுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்வதை எளிதாக்க இந்த மாலில் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. வழிகாட்டுதல், பொருட்களை வாங்குதல் உள்ளிட்டவற்றுக்கு AI உதவியாக இருக்கும்.

கூடுதல் சிறப்பம்சமாக இந்த மால் டிரைவ்-த்ரூ வசதியுடன் கட்டப்படுகிறது. மேலும் இங்கு மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மாலை மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க எமார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

TAGGED: