2025 ஐபிஎல் மெகா ஏலம்; இறுதிகட்ட பட்டியல் வெளியீடு முழு விவரம்

ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24 & 25 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான இறுதி கட்ட பணிகள் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது இறுதி கட்ட வீரர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த வீரர்களின் எண்ணிக்கை:

நடைபெறவிருக்கும் மெகா ஏலத்திற்கு முதற்கட்டமாக 1,165 இந்திய வீரர்கள், 409 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வ இறுதி கட்ட பட்டியலில் 574 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 366 இந்திய வீரர்கள், 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி கட்ட பட்டியல் விவரம்:

இந்த இறுதி கட்ட பட்டியலில்

கேப்டு இந்திய வீரர்கள் – 46

கேப்டு வெளிநாட்டு வீரர்கள் – 193

இணை நாட்டு வீரர்கள் – 03

அன்கேப்டு இந்திய வீரர்கள் – 318

அன்கேப்டு வெளிநாட்டு வீரர்கள் – 12 

என மொத்தம் 574 வீரர்கள் இடம்பெறவுள்ளனர்.

துவங்கும் நேரம்:

ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற 24 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி, பகல் 03 மணி முதல் நேரடி ஒளிபரப்பு துவங்கும் என அறிவிப்பு.

முதல் ஐந்து முக்கிய செட்டுகள்:

இந்த பட்டியலில், அணிகள் ரசிகர்கள் என அனைவரும் உற்றுநோக்கும் முதல் ஐந்து முக்கிய செட்டுகளில், ஜாம்பவான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதல் செட் : ஜாஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கண்கிசோ ராபாடா, அர்ஷ்தீப் சிங் மற்றும் மிட்சல் ஸ்டார்க்

இரண்டாம் செட் :  யுவேந்திர சகல், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், கே.எல். ராகுல், முகமது சமி, முகமது சிராஜ்

மூன்றாம் செட் :   ஹாரி ப்ரூக், தேவான் கான்வே, ஜோக் மெக்கார்க், எய்டன் மார்க்ரம், தேவுடட் படிக்கல், ராகுல் திரிபாதி, டேவிட் வார்னர்

நான்காம் செட் : ரவிச்சந்திரன் அஷ்வின், வெங்கடேஷ் ஐயர், மிட்சல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வல், ஹர்ஷல் பட்டேல், ரச்சின் ரவீந்திரா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்

ஐந்தாம் செட் : ஜானி பெர்ஸ்ட்டோ, குவிண்டன் டி காக், ரஹ்மானுல்லா குருபாஸ், இஷான் கிஷான், பில் சால்ட்,  ஜிதேஷ் ஷர்மா