துபாய் விமான நிலையத்தில் தொலைத்த தனது மொபைலை கண்டுபிடித்து சென்னைக்கு அனுப்பி வைத்த துபாய் காவல்துறையை பிரபல யூடியூபர் மதன் கௌரி பாராட்டியுள்ளார்.
பிரபல யூடியூபர் மதன் கௌரி கடந்த சில நாட்களுக்கு முன், துபாய்க்கு சென்றுள்ளார். திரும்பி வரும் போது அவரின் ஆப்பிள் ஐபோனை தவறுதலாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தொலைத்துவிட்டார்.
Emirates விமானத்தில் சென்னை திரும்பி கொண்டிருக்கையில் தனது மொபைல் தொலைந்ததை உணர்ந்த மதன் கௌரி, விமான பணிப்பெண்ணின் அறிவுறுத்தலின் பேரில், மின்னஞ்சல் மூலம் துபாய் காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளார்.
சில நிமிடங்களில் பதிலளித்த துபாய் காவல்துறை, தொலைந்த மொபைல் குறித்த விவரங்களை பெற்றுக்கொண்டது. மொபைல் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிசெய்து, உடனடியாக சென்னைக்கு அடுத்த விமானத்தில் அதை அவருக்கு இலவசமாக அனுப்பி வைத்தது.
இதை சற்றும் எதிர்பாராத யூடியூபர் மதன் கௌரி, இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு, துபாய் காவல்துறையை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் அந்த வீடியோவில், “பணம் பெற்றுக்கொண்டு இதை செய்யவில்லை.
துபாய் காவல்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்த காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
