துபாயில் நடைபெற்ற ‘மை லார்ட்’ படத்தின் வெற்றி விழா!

சசிகுமார் நடிப்பில் வெளியான ‘மை லார்ட்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழா பிப்ரவரி 21, 2026 அன்று துபாயில் நடைபெற்றது. 

துபாய் தெய்ராவில் உள்ள அல் குரைரர் செண்டரில் ஸ்டார் சினிமாஸில் நடைபெற்ற இந்த வெற்றி விழா கொண்டாட்டத்தில் இப்படத்தின் நடிகர்கள் சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சராக கே.ஆர்.ஜி குழுமத் தலைவர் திரு. கண்ணன் ரவி இருந்தார்.

இப்படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட நடிகர்கள் சசிகுமார், சைத்ரா ஜே ஆச்சார்,  மேடையில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். மேலும் படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் படத்தில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

செல்வி. கலைவாணி, டி.பி.க்யூ புரோ ஈவென்ட்ஸ் (DBQ Pro Events) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர்.  இந்நிகழ்வில் படத்தின் நாயகி சைத்ரா, “எச காத்தா” பாடலை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த முழு நிகழ்வை VJ ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார். 

இந்நிகழ்விற்கு முன்னதாக நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடனான கலந்துரையாடல் துபாய் ஐந்திணை உணவகத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. 

பிப்ரவரி 13, 2026 முதல் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வெற்றி கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சர் கே.ஆர்.ஜி குழுமத் தலைவர் திரு. கண்ணன் ரவி.  

தமிழ் Buzz துபாய் & வலை பேச்சு (Powered by), ஸ்டார் சினிமாஸ் (Venue Partner), கில்லி எஃப்.எம் (Radio Partner), சாரா பிளாசம் (Fashion Partner), சுரேஷ் புன்னசேரில்/குளோபல் மீடியா ஹப் (Supported by) ஆகியோர் இந்நிகழ்வில் இதர பங்களிப்பாளர்கள் ஆவர். 

படத்தின் வெற்றி விழாவைத் தொடர்ந்து,  நடிகர் சசிகுமார், நடிகை சைத்ரா ஜே ஆச்சார் உள்ளிட்ட திரைப்படக் குழுவினர், பாலைவன சவாரி மேற்கொண்டனர். இதில் குவாட் பைக்குகளில் சாகசம், ஒட்டக சவாரி செய்து, அமீரகத்தின் தேசிய பறவையான பால்கன் (Falcon)  பறவைகளை கைகளில் ஏந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

TAGGED: