கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியாக நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபி இடையில் சில காரனங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளது, இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு உலக நாடுகள் பங்குபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும், பாகிஸ்தானை விட்டு வெளியே நடக்கும் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்து வந்தன. இந்நிலையில் பிசிசிஐ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்துவதற்கு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் இஸ்லாமபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான முஹம்மது இஷாக் தார் ஆகியோருக்கு இடையே கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அப்பகுதியில் கிரிக்கெட் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை எழுந்ததை அடுத்து இது வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைபிரிட் மாடல் முறையில் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடிதம் குறித்து PCB மறுப்பு:
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க மொஹ்சின் நக்வ் கூறுகையில் “நாங்கள் இதுவரை பிசிசிஐ-யிடம் இருந்து எந்த ஒரு கடிதமும் இதுவரை வரவில்லை, கடிதம் என்னிடம் கிடைத்த பின்பு அதனை உடனடியாக அரசுக்கும், ஊடகங்களுக்கும் கொண்டு வருவேன், பிறகு அது தொடர்பாக நாங்கள் பரிசீலனை செய்வோம். கடந்த இரண்டு மாதங்களாக இந்திய ஊடகங்களில் பாகிஸ்தானில் இந்தியா விளையாடாது போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன, எங்கள் முடிவில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். பிசிசிஐ அவர்களின் முடிவை எழுத்து பூர்வமாக தெரிவிக்கட்டும், இதுவரை ஹைப்ரிட் மாடல் பற்றி நாங்கள் எதுவும் எங்கள் காதுகளில் படவில்லை, அதை கேட்கவும் நாங்கள் தயாராக இல்லை” என்று அவர் கூறினார்.
கிரிக்கெட்டும் அரசியலும் கலக்க கூடாது:
மொஹ்சின் நக்வ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராத பட்சத்தில், பாகிஸ்தான் அணியும் இனி இந்தியாவில் அரங்கேறும் சர்வதேச தொடரில் பங்கேற்காது எனவும், கிரிக்கெட் ஒருபோதும் அரசியலோடு கலக்க கூடாது என்பதே எங்கள் விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.
