துபாயில் நடைபெற்ற TN 2026 தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நடிகர்கள் தம்பி ராமையா,  நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள TN 2026 தங்க நட்சத்திரம் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  ஏப்.10 அன்று துபாயில் உள்ள அல் குரைர் சென்டரில்  ஸ்டார் சினிமாஸில் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில்  பட தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி  உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் தமிழ், மலையாள ஊடகவியலாளர்கள், சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து கொண்டனர். அவர்களின்  பட தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி கேள்விக்கு பதிலளித்து கலந்துரையாடினர். 

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால், பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசியல் ரீதியான கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஏப்.11 அன்று “TN 2026 – தங்க நட்சத்திரம்” திரைப்படத்தின்   திரையிடல் துபாய், தெய்ராவில்,  அல் குரைர் செண்டரில் உள்ள ஸ்டார் சினிமாஸில் மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. இத்திரைப்படம் ஏப்ரல் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை கலைவாணி சங்கர் ஏற்பாடு செய்திருந்தார். ஊடக பார்ட்னராக தமிழ் buzz துபாய் இருந்தது. சுரேஷ் புன்னசேரி இந்நிகழ்ச்சிக்கு ஆதரவளித்திருந்தனர்.