17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை அணிகள்
நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஓமன், ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு டி20 வடிவில் போட்டியிடுகின்றன.
குரூப் ஏ
- இந்தியா
- பாகிஸ்தான்,
- ஐக்கிய அரபு அமீரகம்
- ஓமன்
குரூப் பி
- இலங்கை
- வங்கதேசம்
- ஆப்கானிஸ்தான்
- ஹாங் கா
போட்டிகளுக்கான அட்டவணை
நடப்பாண்டு செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக மாலை 6 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அமீரகத்தில் நிலவும் அதீத வெப்பம் காரணமாக போட்டிகள் மாலை 6:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் மாலை 4:00 மணிக்கு தொடங்கும்.
- செவ்வாய், 9 செப்டம்பர்: ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் – அபுதாபி – மாலை 6:30 மணி
- புதன், 10 செப்டம்பர்: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் – துபாய் – மாலை 6:30 மணி
- வியாழன், 11 செப்டம்பர்: வங்கதேசம் vs ஹாங்காங் – அபுதாபி – மாலை 6:30 மணி
- வெள்ளி, 12 செப்டம்பர்: பாகிஸ்தான் vs ஓமன் – துபாய் – மாலை 6:30 மணி
- சனி, 13 செப்டம்பர்: வங்கதேசம் vs இலங்கை – அபுதாபி – மாலை 6:30 மணி
- ஞாயிறு, 14 செப்டம்பர்: இந்தியா vs பாகிஸ்தான் – துபாய் – மாலை 6:30 மணி
- திங்கள், 15 செப்டம்பர்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs ஓமன் – அபுதாபி – மாலை 4:00 மணி
- திங்கள், 15 செப்டம்பர்: இலங்கை vs ஹாங்காங் – துபாய் – மாலை 6:30 மணி
- செவ்வாய், 16 செப்டம்பர்: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் – அபுதாபி – மாலை 6:30 மணி
- புதன், 17 செப்டம்பர்: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – துபாய் – மாலை 6:30 மணி
- வியாழன், 18 செப்டம்பர்: இலங்கை vs ஆப்கானிஸ்தான் – அபுதாபி – மாலை 6:30 மணி
- வெள்ளி, 19 செப்டம்பர்: இந்தியா vs ஓமன் – அபுதாபி – மாலை 6:30 மணி
- சனி, 20 செப்டம்பர்: பி1 vs பி2 – துபாய் – மாலை 6:30 மணி
- ஞாயிறு, 21 செப்டம்பர்: A1 vs A2 – துபாய் – மாலை 6:30 மணி
- செவ்வாய், 23 செப்டம்பர்: A2 vs B1 – அபுதாபி – மாலை 6:30 மணி
- புதன், 24 செப்டம்பர்: A1 vs B2 – துபாய் – மாலை 6:30 மணி
- வியாழன், 25 செப்டம்பர்: A2 vs B2 – துபாய் – மாலை 6:30 மணி
- வெள்ளி, 26 செப்டம்பர்: A1 vs B1 – துபாய் – மாலை 6:30 மணி
- ஞாயிறு, 28 செப்டம்பர்: இறுதிப் போட்டி – துபாய் – மாலை 6:30 மணி
மழை அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக இறுதிப் போட்டி நடைபெறாவிட்டால் மறுநாள் திங்கள், 29 செப்டம்பர் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
