வேலைக்காகவோ, வணிக நோக்கத்திற்காகவோ அல்லது சுற்றுலாப் பயணமாகவோ ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் அனைவருக்கும் இங்குள்ள அடிப்படை நடைமுறைகள் மற்றும் சட்டங்களை அறிந்து கொள்வது பயணத்தை மிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.
அடிப்படைத் தகவல்கள் & புவியியல்
7 எமிரேட்களின் கூட்டமைப்பு: அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராஸ் அல் கைமா மற்றும் புஜைரா ஆகிய 7 எமிரேட்கள் (Emirates) சேர்ந்ததே அமீரகம்.
தலைநகரம்: அபுதாபி
அதிகாரப்பூர்வ மொழி: அரபி. இருப்பினும், ஆங்கிலம் பரவலாகப் பேசப்படுகிறது.
அதிகாரப்பூர்வ மதம்: இஸ்லாம் (Islam)
நேர மண்டலம்: இந்திய நேரத்தை (IST) விட அமீரக நேரம் 1 மணி நேரம் 30 நிமிடங்கள் பின் தங்கி இருக்கும் (GMT+4).
நாணயம் & பணப் பரிவர்த்தனை
தேசிய நாணயம்: அமீரக திர்ஹாம் (AED – Arab Emirati Dirham).
டாலர் இணைப்பு: 1 அமெரிக்க டாலர் (USD) = 3.6725 AED என நிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாணயப் பங்கீடு: 1 திர்ஹாம் என்பது 100 ஃபில்ஸ் (Fils) ஆகும்.
பரிவர்த்தனை: கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்டுகள் நாடு முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
பாஸ்போர்ட் தரம்: ‘ஆர்டன் கேபிடல்’ குறியீட்டின்படி, அமீரக பாஸ்போர்ட் உலக அளவில் 1-ஆம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் 179 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது வருகைப்பதிவு விசா மூலம் செல்லலாம்.
வேலை நாட்கள் & உள்ளூர் விதிகள்
வேலை நாட்கள்: அரசு மற்றும் பெரும்பாலான நிறுவனங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இயங்குகின்றன. வார விடுமுறை சனி மற்றும் ஞாயிறு ஆகும். (ஷார்ஜாவில் திங்கள் முதல் வியாழன் வரை அரசு அலுவலகங்கள் இயங்கும்).
பண்பாடு & உடைக்கட்டுப்பாடு: இஸ்லாம் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தாலும், பிற மதத்தினருக்கு முழு சுதந்திரம் அளிக்கும் சகிப்புத்தன்மைமிக்க நாடாக அமீரகம் உள்ளது. பொது இடங்களில் கண்ணியமான ஆடைகளை அணியலாம்.
சட்டங்கள்: சாலை விதிகளை மீறுவது, அனுமதியின்றி மற்றவர்களைப் புகைப்படம் எடுப்பது, பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொள்வது போன்றவற்றிற்குக் கடுமையான அபராதங்கள் உண்டு.
போக்குவரத்து & தொடர்பு வசதிகள்
நாட்டின் தொலைபேசி குறியீடு: +971
நகரங்களுக்கான எண்கள்: அபுதாபி (02), துபாய் (04), ஷார்ஜா/அஜ்மான் (06).
போக்குவரத்து: மெட்ரோ, டாக்சிகள் மற்றும் பேருந்துகள், மோனோ ரயில், ட்ராம், பயணிகள் ரயில்கள் உள்ளன. துபாய் லூப், எதிஹாட் பயணிகள் ரயில்
வாகனங்களை ஓட்டுபவர்கள் வலதுபுறத்தில் வாகனங்களைச் செலுத்த வேண்டும்.
அவசரக்கால உதவி எண்கள் (Emergency Numbers)
அமீரகத்தில் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
காவல்துறை (Police) 999
ஆம்புலன்ஸ் (Ambulance) 998
தீயணைப்புத் துறை (Civil Defence) 997
கடலோரக் காவல் படை (Coast Guard) 996
அமீரகத்தின் அதிபர்கள் (Presidents of UAE)
மாண்புமிகு ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களே 7 எமிரேட்களை ஒன்றிணைத்து, அமீரகத்தை உருவாக்கினார். அமீரகத்தின் நிறுவன தந்தை மற்றும் அமீரகத்தின் முதல் அதிபர் என்று போற்றப்படக்கூடிய இவர், 1971ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஆட்சி செய்தார்.
மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நாட்டின் இரண்டாவது அதிபராவார். இவர் 2004 முதல் 2022 அமீரக அதிபராக இருந்தார்.
மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தற்போதைய அதிபர் மற்றும் அபுதாபியின் ஆட்சியாளராக இருந்து வருகிறார். 2022ஆம் ஆண்டு மே 14 முதல் தற்போது வரை அதிபராக இருந்து வருகிறார்.
