மிலாடி நபியை முன்னிட்டு அரசு & தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிப்பு!

முகம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலாடி நபி:

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சர்வதேச வானியல் மையம், இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி அல் அவ்வலின் பிறை, ஆகஸ்ட் 23, சனிக்கிழமை அன்று வளைகுடா நாடுகளில் காணப்படவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதன் விளைவாக, ஈராக், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், பாலஸ்தீனம், எகிப்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகள் ரபி அல் அவ்வல் மாதத்தை ஆகஸ்ட் 24 ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஜோர்டான், அல்ஜீரியா, லிபியா, மொராக்கோ, மவுரித்தேனியா மற்றும் ஆசியா நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, புருனே, சிங்கப்பூர், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இம்மாதத்தை ஆகஸ்ட் 25, திங்கட்கிழமை அன்று தொடங்கின.

வானியல் அட்டவணைப்படி, ரபி அல் அவ்வல் மாதத்தின் 12வது நாளான முகம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 5, வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.

அரசு  ஊழியர்களுக்கான விடுமுறை

இந்நிலையில் அரசு  ஊழியர்களுக்கான விடுமுறையை அரசு மனிதவளத்திற்கான மத்திய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி செப்டம்பர் 5, வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையுடன் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து வருவதால், அரசு ஊழியர்கள் மூன்று நாள் தொடர் விடுமுறையை அனுபவிப்பார்கள்.

தனியார் ஊழியர்களுக்கான விடுமுறை

அமீரகத்தில் உள்ள தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறையும்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி மிலாடி நபி பண்டிகையான செப்டம்பர் 5ஆம் தேதி அமீரகத்தில் உள்ள தனியார் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவித்துள்ளது அரசு. இதன் மூலம் தனியார் துறை ஊழியர்களும் 3 நாட்கள் விடுமுறையை அனுபவிப்பர்.


TAGGED: