வீட்டுவசதி திட்டம் முதல் கொக்கைன் கடத்தல் வரை- இந்த வார முக்கிய செய்திகள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வாரம் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளை இத்தொகுப்பில் காணலாம்.

அயன் பட பாணியில் கொக்கைன் காப்ஸ்யூல்கள் கடத்தல்!

வயிற்றில் விழுங்கி கடத்தி வரப்பட்ட AED 5 மில்லியன் மதிப்புள்ள 89 கொக்கைன் காப்ஸ்யூல்களை அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தென் அமெரிக்காவில் இருந்து வந்த சந்தேகத்துக்கு இடமான ஒரு பயணியை உடல் முழுவதும் ஸ்கேன் செய்து சோதனை செய்தலில், அவர் குடலில் காப்ஸ்யூல்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை வெளியே எடுத்து பார்த்த போது,  கொக்கைன் காப்ஸ்யூல்கள் என்பது தெரியவந்தது.

இந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சியை, சயீத் சர்வதேச விமான நிலையத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையத்தின் (ICAPC) துறைமுகங்களின் பொது இயக்குனரகத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Magical Milky Way Night நிகழ்ச்சி:

அபுதாபி அல் குவா பாலைவனத்தில் ஐந்து மாதங்களுக்கு பால்வெளி மண்டலத்தைக் காண சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது துபாய் வானியல் குழு.

தேதி: சனிக்கிழமை 24/05/2025
நேரம்: மதியம் 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை.

Magical Milky Way Night எனும் இந்த நிகழ்வை காண ஒரு நபருக்கு AED 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்தவர்களே இந்நிகழ்விற்கு அனுமதிக்கப்படுவர், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்நிகழ்விற்கு இரவு முழுவதும் தொலைநோக்கி கண்காணிப்பு கிடைக்கும். மேலும் பாய்கள், பானங்கள் மற்றும் லேசான சிற்றுண்டிகள் வழங்கப்படும். பால்வீதியை புகைப்படம் எடுக்க  கேமராவை எடுத்துச் செல்லலாம்.

மலிவு விலை வீட்டுவசதி திட்டம் !

துபாயில் தனியார் மற்றும் பொது துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில், மலிவு விலை வீட்டுவசதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 இந்த திட்டத்திற்காக RTA, துபாய் நகராட்சி மற்றும் Wasl குழுமம் ஆகியவற்றுடனான ஒப்பந்தத்தில் துபாய் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கையெழுத்திட்டார். 

Me’aisem 1, Al Twar 1, Al Qusais Industrial 5, Al Leyan 1 உள்ளிட்ட ஆறு பகுதிகளில் மொத்தமாக 1.46 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் வீடுகள் கட்டப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 17,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படும்.  துபாய் பணியாளர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக துபாயை வலுப்படுத்துவது தான் எங்கள் குறிக்கோள் என்று துபாய் பட்டத்து இளவரசர் X தள பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆப் மூலம் குர்பானி ஆர்டர் செய்யலாம்!

கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் குர்பானி கொடுப்பதற்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை Careem மற்றும் Noon Minutes ஆப்-களில் முன்கூட்டியே ஆர்டர் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Grocery App-களில் அந்த விலங்குகளின் விலை AED 1,000 முதல் AED 7,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மே 15 முதல் ஜூன் 4 வரை, வாடிக்கையாளர்கள் இறைச்சியை வீட்டில் பெறலாம் அல்லது UAE உணவுக் வங்கிக்கு தானமாக வழங்கலாம்.

Noon Minutes Zabehaty உடன் கூட்டிணைந்து, முழு மாடு அல்லது ஒட்டகம் (120-150 கிலோ) AED 7,000க்கு வழங்குகிறது. சோமாலி ஆடு Dh1,000, காஷ்மீர் ஆடு AED 1,300, நைமி ஆடு AED 1,800 எனவும் விருப்பங்கள் உள்ளன.

Careem தபாயேஹ் அல் எமாராத்துடன் இணைந்து உள்ளூர் வெள்ளாடு AED 1,723 மற்றும் நைமி வெள்ளாடு AED 2,143க்கு வழங்குகிறது.

Dubai Summer Surprises தேதி அறிவிப்பு!

ஷாப்பிங், பொழுதுபோக்கு, உணவுகள் என கோடையை குதூகலமாக்கும் Dubai Summer Surprises 2025 நிகழ்வு, ஜூன் 27 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறவுள்ளது.

முதன்முறையாக மூன்று பிரிவுகளாக இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

Summer Holiday Offer: ஜூன் 27 – ஜூலை 17

Great Dubai Summer Sale: ஜூலை 18 – ஆகஸ்ட் 10

Back to school sale: ஆகஸ்ட் 11 – ஆகஸ்ட் 31

களைகட்டும் இந்த நிகழ்ச்சியை துபாய் ஃபெஸ்டிவல்  சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) ஏற்று நடத்துகிறது.

TAGGED: