உலக நிதி போட்டித் தரவரிசையில் முன்னேறி வரும் அமீரகம்!

ஐக்கிய அரபு அமீரகம்  உலக நிதி போட்டித் தரவரிசையில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. IMD வெளியிட்ட உலக போட்டித் தரவரிசை ஆண்டு புத்தகத்தில் (World Competitiveness Yearbook 2025), அரசு ஆதரவு குறியீட்டில் (Government Support Index) ஐக்கிய அரபு அமீரகம்.

சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) வெளியிட்ட உலக போட்டித் தரவரிசை ஆண்டு புத்தகத்தில் (World Competitiveness Yearbook 2025), அரசு ஆதரவு குறியீட்டில் (Government Support Index)

இது கடந்த ஆண்டு 43வது இடத்திலிருந்த அமீரகம் இந்தாண்டு 27 இடங்கள் முன்னேறி,  16வது இடம் பிடித்து உயர்ந்த சாதனை புரிந்துள்ளது.

 அரசு ஆதரவு குறியீடு என்றால் என்ன?

இந்தக் குறியீடு, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) நிகராக அரசு ஆதரவின் மதிப்பளவை அளவிடுகிறது. இது, பொது நிதி மேலாண்மை எவ்வளவு திறம்பட உள்ளது என்பதற்கான அளவுகோலாகவும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் இலக்கு சார்ந்த செலவினக் கொள்கைகளின் திறனையும் காட்டுகிறது.

நிதியமைச்சகத்தின் கருத்து:

இந்த முன்னேற்றம், அரசுக்கும் உள்ளூர் நிதித் துறைகளுக்கும் இடையேயான வெற்றிகரமான ஒத்துழைப்பை காட்டுகிறது என்றும், நிதி பகுப்பாய்வு கருவிகளை மேம்படுத்துதல், வளங்களை திறமையாகப் பயன்படுத்துதல் மற்றும் ஆளுகை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முயற்சிகள் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாகும் என்றும், 2026-க்குள் இந்தக் குறியீட்டில் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இடம் பெற ஐக்கிய அரபு அமீரகம் இலக்கு வைத்துள்ளது என்றும் அமீரக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னணியில் அமீரகம்:

IMD வெளியிட்ட 2025 உலக போட்டித் தரவரிசை ஆண்டு புத்தகத்தில், அமீரகம் பல குறியீடுகளில் முன்னணி 10 இடங்களை பிடித்துள்ளது.

முதலீட்டு மூலதனம் (Venture Capital) மற்றும் தனிநபர் வருமான வரி (personal income tax) வசூலில் GDP சதவீத அடிப்படையில் உலகளவில் முதலிடத்தையும், கம்பெனி லாப வரி விகிதத்தில் (Corporate Profit Tax Rate) 2-வது இடத்தையும், அரசு நிதி உபரியில் மூன்றாவது இடத்தையும், மறைமுக வரி வசூல் குறைவு மற்றும் நுகர்வு வரி விகித குறைவில் 4வது இடத்தையும், சொத்து மற்றும் மூலதன வரி வசூலில் 5வது இடத்தையும், பொது நிதியில் 6வது இடத்தையும், அரசு செலவினம் GDP சதவீத அடிப்படையில் உலகளவில் 7வது இடத்தையும், பிராந்தியத்தில்  முதலிடத்தையும், மேலும் அரசு நுகர்வு செலவின வளர்ச்சியில்  9வது இடத்தையும் பெற்றுள்ளது.

எதிர்கால இலக்குகள்

ஐக்கிய அரபு அமீரகம், நவீன மற்றும் டிஜிட்டல் நிதி அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

தகவல் சேகரிப்பை மேம்படுத்துதல், மத்திய மற்றும் உள்ளூர் நிதி அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், மற்றும் பொதுச் செலவினங்கள் நேரடி மேம்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்தல் ஆகியன இதில் அடங்கும்.

இந்த சீர்திருத்தங்கள் சேவைகளின் தரத்தை உயர்த்தி, நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தி, நாட்டின் இலக்குகளுக்கு ஆதரவு அளிக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

TAGGED: