🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி..UAE-இல் இனி இந்த பொருட்களை எல்லாம் குறைந்த விலையில் வாங்கலாம்!

இந்தியாவில் அமலாகும் புதிய ஜிஎஸ்டி வரியால் அமீரகத்தில்  இனி எந்தெந்த பொருள்களில் விலை மாற்றம் ஏற்படும் என விரிவாக்கப் பார்க்கலாம்.

செப்டம்பர் 22, 2025 முதல் இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பழைய நான்கு அடுக்கு வரி அமைப்பை நீக்கி  5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கின்றன. அதேசமயம், ஆடம்பர மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தனியாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் கவனத்திற்கு:

தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவது, இந்தியப் பொருட்கள் வாங்குவது அல்லது இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வது போன்ற விஷயங்களில், இந்த மாற்றங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எவையெல்லாம் விலை குறைகிறது?

🔹 அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள்: ஷாம்பூ, பேஸ்ட், ஹேர் ஆயில், சோப்புகள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரி 18%-லிருந்து 5% -ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

🔹 பண்டங்கள்:  மிக்சர்கள், ரெடி-டூ-ஈட் உணவுகள் – இவை 12%-இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளன.

🔹 பால் பொருட்கள்: அமுல் 100 கிராம்  வெண்ணெய் 62 ரூபாயில் இருந்து 58 ரூபாயாக குறைத்துள்ளது. UHT பால் 75 ரூபாயாக உள்ளது. மதர் டைரி நிறுவனமும் பன்னீர், நெய், மில்க்‌ஷேக் ஆகியவற்றின் விலையைக் குறைத்துள்ளது.

🔹 காப்பீடு: தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் – முழுமையாக ஜிஎஸ்டி விலக்கு பெற்றுள்ளன. (Term plans, family floater plans, senior citizen health covers ஆகியவை உட்பட)

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பணம் அனுப்பும் குடும்பங்களுக்கு, இந்தியாவில் வாழும் உறவுகளுக்கான உணவு மற்றும் சுகாதாரச் செலவுகள் குறையும்.

எவையெல்லாம் விலை உயருகிறது?

🔸 புகையிலைப் பொருட்கள்: சிகரெட்டுகள், சிகார், குட்கா, பான் மசாலா, புகையிலை – இவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 40% -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

🔸 ஆடம்பர கார்கள் மற்றும் SUV-கள்: பெரிய என்ஜின் கொண்ட வாகனங்கள் 40% ஜிஎஸ்டிக்குள் வருகின்றன.

🔸 சர்க்கரை மற்றும் கார்பனேட்டட் பானங்கள்: சுவையூட்டிய சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் – இவையும் 40% ஜிஎஸ்டியில் உள்ளன.

🔸 மது: மது ஜிஎஸ்டி வரம்புக்குள் இல்லை. மதுவுக்கு ஒவ்வொரு மாநிலமும் தனித்து வரி விதிக்க முடியும்.

எவற்றிலெல்லாம் மாற்றம் இல்லை?

✔️ பயணச் சேவைகள்: சாலை போக்குவரத்துக்கான ஜிஎஸ்டி வரி 5% -தில் தொடர்கிறது 

✔️ விமான பயணம்: எகானமி கிளாஸ் – 5%, மற்ற கிளாஸ்கள் – 18%

✔️ இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்: அமீரகத்தில் இருந்து வரும் பொருட்கள் உட்பட, புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் இவைகளுக்கும் பொருந்தும்.

✔️ பழைய பொருட்கள்: புது விலைப்பட்டியல் மட்டும் வெளியிடப்படும். பழைய MRP உள்ள பொருட்களை விற்பனை செய்ய அனுமதி உள்ளது. ஆனால் ரசீது மட்டும் புதிய ஜிஎஸ்டி விகிதத்தை காட்ட வேண்டும்.

நிறுவனங்களில் ஏற்படும் தாக்கம்:

நுகர்வோர் பொருட்கள் (FMCG) தயாரிப்பாளர்கள் – ஹிந்துஸ்தான் யூனிலிவர், டாபூர் போன்ற நிறுவனங்களுக்கு நன்மை ஏற்படும். ஏனெனில் குறைந்த ஜிஎஸ்டி விகிதம் வாங்கும் வர்த்தகத்தை ஊக்குவிக்கும்.

புகையிலை நிறுவனங்கள் – புதிய உயர் வரியால் பாதிக்கப்படும்.

மூலதன சந்தைகள் – இப்போதுள்ள ஜிஎஸ்டி மாற்றம், அமீரகத்தில் இருந்து இந்தியப் பங்கு அல்லது மியூச்சுவல் ஃபண்ட் வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

இது குறித்து இந்திய பிரதமர் மோடி அவர்கள் பேசுகையில், நவராத்திரியை முன்னிட்டும், தீபாவளியை முன்னிட்டும் மக்கள் பொருட்களை வாங்கும் வகையில் வரியில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் நோட் பண்ணிக்கோங்க!

✅ வீட்டிற்கு அனுப்பும் பணம் இனி அதிக பயன் தரும் – குடும்ப செலவுகள் குறையும்.

✅ இந்திய பொருட்கள் வாங்கும் போது அமீரகத்தில் விலை குறையும் – குறிப்பாக பேக்கேஜ் ஸ்நாக்ஸ், டைரி பொருட்கள்.

 ✅ இந்தியாவில் காப்பீட்டுப் பாலிசிகள் வாங்குபவர்களுக்கு இனி ஜிஎஸ்டி விலக்கு, செலவுகள் குறையும்.