துபாய் ஸ்டார் சினிமாஸில் கோலாகலமாக நடைபெற்ற விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் பிரத்யேக Meet & Greet நிகழ்வு!

விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘நூறு சாமி’  திரைப்படத்தின் பிரத்யேக Meet & Greet நிகழ்ச்சி, ஜூன் 14, 2026 அன்று  துபாய் தேராவில் உள்ள ஸ்டார் சினிமாஸில் உற்சாகமாக நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி (Invite-Only) என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த பிரத்யேக நிகழ்வில், அரங்கு நிறைந்த அளவில் துபாய் வாழ் தமிழ் ரசிகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த பிரம்மாண்டமான நிகழ்வின் டைட்டில் ஸ்பான்சராக (Title Sponsor) துபாய் வாழ் பிரபல தொழிலதிபரும், கே.ஆர்.ஜி. நிறுவன தலைவருமான திரு. கண்ணன் ரவி இருந்தார்.  இந்நிகழ்ச்சியை பிளான் பி ஈவென்ட்ஸ் (Plan B Events) நடத்தியிருந்தது. நிகழ்ச்சியை மீடியா பார்ட்னராக தமிழ் Buzz  துபாய்  ஊடகம் இருந்தது.  

நிகழ்ச்சியில் பங்கேற்ற நாயகன் விஜய் ஆண்டனி, தனது ரசிகர்களுடன் மிகவும் எளிமையாகக் கலந்துரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தவர், அவர்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார். 

மேலும், ‘நூறு சாமி’ திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்களையும், படப்பிடிப்பு அனுபவங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியைத் தொகுப்பாளர்கள் வி.ஜே. ஐஸ்வர்யா மற்றும் ஆர்.ஜே. மாயா ஆகியோர் தங்களது கலகலப்பான பேச்சால் சுவராஸ்யமாக வழிநடத்தினர். எலிஃபென்ட் ஸ்டுடியோஸ் (Elephantstudios) நிகழ்வின் அழகான தருணங்களைப் புகைப்படங்களாகப் பதிவு செய்தது.

TAGGED: