🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

துபாயில் வன சூழலில் அமையவுள்ள மால்; எந்த பகுதியில் தெரியுமா?

துபாயில் மரங்கள் மற்றும் இயற்கை சூழல்களுடன் அமைந்துள்ள காஃப் வூட்ஸ் குடியிருப்புப் பகுதியில் AED 5.4 பில்லியன் மதிப்பில் புதிய மால் ஒன்றைக் கட்ட மஜித் அல் ஃபுத்தைம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வன சூழலில் மால்:

கட்டிடங்கள், சமூகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் முன்னணியில் இருக்கும் மஜித் அல் ஃபுத்தைம் (Majid Al Futtaim) நிறுவனம், கஃப் உட்ஸ் மால் (Ghaf Woods Mall) என்ற பெயரில் உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு மையத்தை துபாயில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மாலின் சிறப்பம்சங்கள்: 

AED 15.4 பில்லியன் செலவில் உருவாகும் இந்தக் குடியிருப்புப் பகுதியின் மத்தியில் அமையவிருக்கும் இந்த ஷாப்பிங் மால் பொழுதுபோக்கு மற்றும் இயற்கையின் கலவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கஃப் வுட்ஸ் மால், துபாயில் இந்த நிறுவனத்தின் புதிய தலைசிறந்த ஷாப்பிங் மையமாக (Flagship Destination) அமையும். இதுவே, பிராந்தியத்தில் வன சூழலில் அமையவிருக்கும் முதல் சில்லறை வர்த்தக வளாகம் என்ற பெருமையைப் பெறுகிறது.

எங்கு அமையவுள்ளது: 

இந்த மால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று மஜித் அல் ஃபுத்தைம் டெவலப்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஹமது எல் ஷாமி (Ahmed El Shamy) தெரிவித்துள்ளார். மேலும் இந்த மால், E311 (ஷேக் முகமது பின் சயீத் சாலை)  இடத்தில் அமையவுள்ளது. 

சிறந்த பிராண்டட் கடைகள், பலவிதமான உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த மால் இருக்கும்.

இந்த கஃப் உட்ஸ் மால், மஜித் அல் ஃபுத்தைம் நிறுவனத்தின் 30-வது மாலாகும், ஐக்கிய அரபு அமீரகத்தின் 19-வது மாலாகும்.