அடுத்த சில நாட்களுக்கு அமீரகத்தில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
வியாழன் (22.01.2026):
இன்று வானம் பொதுவாக ஆங்காங்கே மேகமூட்டத்துடனோ காணப்படும். கடற்கரை மற்றும் வடக்கு பகுதிகளில் தாழ்வான மேகங்கள் உருவாகலாம். குளிர் சற்று அதிகரிக்கும்.
வியாழன் இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். மிதமான வேகத்தில் வடமேற்கு திசையில் இருந்து காற்று வீசும். சில நேரங்களில் பலமான காற்று வீசக்கூடும் (குறிப்பாக கடல் பகுதிகளில்).
இதனால் தரைப்பகுதியில் மணல் மற்றும் தூசி பறக்க வாய்ப்புள்ளது. அரேபிய வளைகுடா பகுதியில் கடல் மிகவும் சீற்றமாக இருக்கும் (இரவில் அலைகள் சற்று குறையலாம்). ஓமன் கடல் பகுதியிலும் அலைகள் சீற்றமாகவே இருக்கும்.
வெள்ளிக்கிழமை (23.01.2026):
வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் ஈரப்பதம் அதிகரிக்கத் தொடங்கும், இது சனிக்கிழமை காலை வரை நீடிக்கும். காற்றின் திசை மாறி தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையிலிருந்து வீசும்.
காற்று மெதுவாகவோ அல்லது மிதமான வேகத்திலோ இருக்கும், சில நேரங்களில் மட்டும் வேகம் அதிகரிக்கலாம். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரண்டு பகுதிகளிலும் அலைகளின் சீற்றம் குறைந்து, கடல் ஓரளவுக்கு அமைதியாக இருக்கும்.
சனி (24.01.2026):
கடல் பகுதிகள், கடற்கரை மற்றும் நாட்டின் வடக்கு பகுதிகளில் மேகமூட்டம் அதிகமாகும். ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வெப்பநிலையும் சற்று உயரக்கூடும்.
ஞாயிறு (24.01.2026):
சனிக்கிழமையைப் போலவே வானிலை நிலவும். ஆனால், ஞாயிறன்று மேகங்கள் இன்னும் அதிகமாகக் காணப்படும். கடற்கரை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
கடந்த வாரம் அமீரகத்தில் வெப்பநிலை குறைவதுடன், பனிமூட்டம் மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
