ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் ஜன. 24, 2026 அன்று மாலை 6.30 மணி முதல் இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோல்டன் ஸ்பரோவால் (Golden Sparrow) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசை கச்சேரியில் பிரபல பாடகர்களான ஸ்ரீகாந்த் தேவா, அனுராதா ஸ்ரீராம், மனோ, காயத்ரி ராஜிவ், ஸ்ருதி சேகர், தேவு மேத்யூ, பிரியங்கா, அஜய் கிருஷ்ணா, ப்ரகீதா ரினு, சத்ய பிரகாஸ் தர்மர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு இசை கச்சேரியை கண்டும், கேட்டும் ரசித்தனர். இந்நிகழ்ச்சியையொட்டி முன்னதாக ஜன. 23, 2026 அன்று துபாயில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது . இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேவா, ஸ்ரீ காந்த் தேவா, பாடகர்கள் மனோ, அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தேவா அவர்கள், “டபாய்க்கிறாடா கண்ணம்மா” பாடலைப் பாடினார்.
