பூக்கி திரைப்பட ‘Preview Show’; ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவான பூக்கி திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி பிப்.14 அன்று மாலை 6 மணிக்கு துபாய் அல் குரைரர் மாலில் உள்ள ஸ்டார் சினிமாஸில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இசையமைப்பாளரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி கலந்து கொண்டு ரசிகர்களிடம் கலந்துரையாடினார். 

அப்போது அவர் விடாமுயற்சியால் மட்டுமே தான் முன்னேறியுள்ளதாகவும், பிச்சைக்காரன் படம் போலவே இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்கள் கதறி அழுகப் போவதாகவும், இப்படம் Gen-z-யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன் படத்திலிருந்து, “நூறு சாமிகள் இருந்தாலும்” பாடலை பாடினார். இந்நிகழ்வு spread smiles events and media ஆதரவுடன் golden sparrow events மூலம் நடத்தப்பட்டது.

TAGGED: