அமீரகத்தில் 2026ஆம் ஆண்டு “குடும்ப ஆண்டாக” கடைபிடிக்கப்படுவதையொட்டி, ஷாப்பிங், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் தள்ளுபடி வழங்கும் Fazaa அட்டை, குடியிருப்பாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Fazaa இலவச உறுப்பினர் திட்டம்
ஐக்கிய அரபு அமீரகம் ‘2026-ம் ஆண்டை குடும்பங்களின் ஆண்டாக’ (Year of the Family 2026) அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, அங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு Fazaa தள்ளுபடி அட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.
குடும்பங்கள் ஒன்றாக நேரத்தைச் செலவிடுவதை ஊக்குவிக்கவும், வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அட்டையைப் பயன்படுத்தி பயணம், உணவகங்கள், ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகளில் சிறப்புத் தள்ளுபடிகளைப் பெறலாம். இந்த உறுப்பினர் அட்டை மூலம் 34,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் தள்ளுபடிகளைப் பெறலாம். Fazaa ஸ்டோர்ஸ் மூலம் 28,000-க்கும் மேற்பட்ட உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களுக்குச் சிறப்புத் தள்ளுபடி கிடைக்கும்.
‘Fazaa Places’ சேவை மூலம் உலகம் முழுவதும் 5,00,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் தங்குவதற்கும், பயணப் பொதிகளுக்கும் (Travel packages) தள்ளுபடிகள் கிடைக்கும்.
Fazaa செயலி (App) வழியாக டிக்கெட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு 70% வரை தள்ளுபடி பெறலாம்.
இந்த இலவச உறுப்பினர் அட்டை 2026-ம் ஆண்டு இறுதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி: இந்த அட்டையைப் பெற குறைந்தது ஒரு மகன் அல்லது மகள் இருக்கு வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: குடும்ப உறுப்பினர்கள் அனைவரது எமிரேட்ஸ் ஐடி (Emirates ID) நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
- https://misc.fazaa.ae/residents-family-year இந்த இணையதள முகவரிக்குச் செல்லவும்.
- பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம் முடியும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
- உங்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் நீங்கள் வசிக்கும் எமிரேட் ஆகிய விவரங்களை பதிவு செய்யவும்.
- எமிரேட்ஸ் ஐடியில் (Emirates ID) உள்ளது போலவே உங்கள் பெயரை உள்ளிடவும்.
- தொடர்ந்து உங்கள் எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும் உங்கள் துணையின் (கணவன்/மனைவி) எமிரேட்ஸ் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் இருவருடைய எமிரேட்ஸ் ஐடி மற்றும் குழந்தைகளின் எமிரேட்ஸ் ஐடியை தெளிவாக தெரியும்படி பதிவேற்றம் செய்யவும்.
- நீங்கள் பதிவிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு, ‘Submit Application’ என்பதை கிளிக் செய்யவும்.
- ‘Submit Application’ கொடுத்தவுடன், உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்த பிறகு, உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் உங்களுக்கு வரும்.
உதவி: ஏதேனும் சந்தேகங்கள் அல்லது உதவி தேவைப்பட்டால், Fazaa-வின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம், அங்கு வசிக்கும் குடும்பங்களைச் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுகிறது. அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் Fazaa நிறுவனமும், குடும்ப அமைச்சகமும் (Ministry of Family) இணைந்து, வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச ‘Fazaa’ உறுப்பினர் அட்டையை வழங்குகின்றன.
