ஐந்தாண்டு விண்வெளித் திட்டம்; சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்னென்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் சமீபத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்த முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

1. விண்வெளித் துறையில் புதிய இலக்கு

ஐக்கிய அரபு அமீரகம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான விண்வெளித் துறை உத்தியை அங்கீகரித்துள்ளது.

இலக்கு: உலகின் முதல் 10 விண்வெளி நாடுகளின் பட்டியலில் இடம்பெறுவது.

தற்போதைய நிலை: விண்வெளித் துறையின் மதிப்பு தற்போது 44 பில்லியன் திர்ஹம்களுக்கும் (AED) அதிகமாக உள்ளது. இதில் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

சாதனைகள்: இதுவரை 30 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு (Mars) ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

எதிர்காலத் திட்டம்: வியாழன்  (Venus) மற்றும் விண்கல் வளையத்திற்கு (Asteroid Belt) புதிய விண்கலங்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

2. பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை

தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் ஐக்கிய அரபு அமீரகம் வலுவாகத் திகழ்வதாக துபாய் ஆட்சியாளர் பெருமிதம் கொண்டார்.

நாட்டின் இராணுவத்தின் தயார்நிலை மற்றும் தொழில்முறைத் திறனை அவர் பாராட்டினார்.

அமீரக மக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் தேசபக்தி மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டாடினார்.

“ஐக்கிய அரபு அமீரகம் தனது சாதனைகளைப் பாதுகாத்து, முன்னைவிட வலுவாக உருவெடுக்கும்” என்று அவர் உறுதி அளித்தார்.

3. ஒருங்கிணைந்த மருத்துவ முறை (Integrative Medicine)

நவீன மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை இணைத்து ஒரு விரிவான சுகாதார அமைப்பை உருவாக்க புதிய உத்திக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

4. சர்வதேச ஒத்துழைப்பு

எரிசக்தி, முதலீடு, ராஜதந்திரம் மற்றும் மனிதாபிமானப் பணிகள் தொடர்பாக 120-க்கும் மேற்பட்ட சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு (MoUs) அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள்,  “நாங்கள் எங்கள் மக்களைக் குறித்துப் பெருமை கொள்கிறோம்.. எங்கள் மண்ணில் வாழும் அனைத்து குடியிருப்பாளர்கள் குறித்தும் பெருமை கொள்கிறோம்.. 

மேலும் போட்டித்தன்மை.. நெகிழ்வுத்தன்மை.. வெளிப்படைத்தன்மை.. மற்றும் பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வலிமை மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த எங்களது வளர்ச்சி மாதிரியைக் குறித்தும் பெருமை கொள்கிறோம்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியானது என்றும் மாறாத.. மற்றும் மாறப்போகாத சில அடிப்படை உண்மைகளின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம்.. ஒரு நவீன சட்டக் கட்டமைப்பு.. உலகில் சிறந்தவற்றில் ஒன்றாகத் திகழும் வாழ்க்கைத்தரம்.. மற்றும் தனது மக்களுக்கும், தனது மண்ணில் வாழும் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விரிவான வளர்ச்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு அரசாங்கம்.. 

எங்களது இந்த அடிப்படைகள் அப்படியே நிலைத்திருக்கும்.. எங்களது பயணம் தொடரும்.. மேலும் இறைவனின் அருளால், இந்த விதிவிலக்கான சூழ்நிலைகளைக் கடந்த பிறகு, எங்களது மீண்டெழுதல் இன்னும் வலிமையானதாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.