துபாயில் சொத்து முதலீட்டாளர்கள் 2 ஆண்டு கால குடியிருப்பு விசா பெறுவதற்கான குறைந்தபட்ச சொத்து  மதிப்பு நீக்கம்! 

துபாயில் சொத்து முதலீட்டாளர்கள்  இரண்டு ஆண்டு கால குடியிருப்பு விசா பெறுவதற்கு இருந்த குறைந்தபட்ச சொத்து  மதிப்பு நீக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர் ஒரு சொத்தின் முழு உரிமையாளராக இருந்தால், 2 ஆண்டுகால குடியிருப்பு விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு சொத்து ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்குச் சொந்தமானதாக இருந்தால், ஒவ்வொரு முதலீட்டாளரின் பங்கும் குறைந்தது AED 400,000 மதிப்புள்ளதாக இருக்க வேண்டும்.

துபாய் நில மேம்பாட்டுத் துறையின் (DLD) கீழ் இயங்கும் ‘கியூப் சென்டர்’ (Cube Centre) இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்

விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள்:

  1. Title Deed: துபாயில் உள்ள சொத்தின் அசல் பத்திரம் (மற்ற எமிரேட்களுக்கு செல்லாது).
  2. கடவுச்சீட்டு: குறைந்தது 6 மாத கால அவகாசம் உள்ள பாஸ்போர்ட் நகல்.
  3. எமிரேட்ஸ் ஐடி (Emirates ID).
  4. புகைப்படம்: ICP விதிமுறைகளின்படி எடுக்கப்பட்ட டிஜிட்டல் புகைப்படம்.
  5. மருத்துவ காப்பீடு (Health Insurance):  அமீரகத்தில் உள்ள ஏதேனும் ஒரு நிறுவனத்தின் காப்பீடு.
  6. நன்னடத்தை சான்றிதழ்: துபாய் காவல்துறையிடம் இருந்து பெறப்பட்டது.
  7. தேசிய அடையாள அட்டை: பாகிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு இது கட்டாயம்.

கூடுதல் நிபந்தனைகள்:

அடமானம் (Mortgage): சொத்து அடமானத்தில் இருந்தாலோ அல்லது தவணை முறையில் (Installment) வாங்கப்பட்டிருந்தாலோ, வங்கி அல்லது டெவலப்பரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) சமர்ப்பிக்க வேண்டும். அதில் இதுவரை செலுத்திய தொகை மற்றும் மீதமுள்ள தொகை குறிப்பிடப்பட வேண்டும்.

முன் தொகை செலுத்துதல்: கட்டி முடிக்கப்பட்ட சொத்துகளுக்கு, மொத்த மதிப்பில் குறைந்தது 50 சதவீதம் அல்லது AED 375,000  செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

குடும்ப ஸ்பான்சர்: தகுதியுள்ள முதலீட்டாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் விசா வழங்க பரிந்துரைக்கலாம். 

சந்தைப் போக்கு 

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் துபாய் ரியல் எஸ்டேட் சந்தை மிகவும் வலுவாக உள்ளது.

மொத்தம் AED 138.7 பில்லியன்  மதிப்பிலான 44,150 ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த ஆண்டை விட முதலீட்டு மதிப்பு 21.2% அதிகரித்துள்ளது.

தற்போது குறுகிய கால வர்த்தகத்தை விட, நீண்ட கால முதலீடுகளை நோக்கியே மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சராசரி ஒப்பந்தத்தின் மதிப்பு  AED 3.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.

TAGGED: