🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

சிறந்த முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கும், அர்ப்பணிப்புடன் உழைக்கும் பணியாளர்களுக்கும் பரிசு; அமீரக அரசு அறிவிப்பு!

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் சிறந்த முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கும், அர்ப்பணிப்புடன் உழைக்கும் பணியாளர்களுக்கும் AED  100,000  வரை பணப்பரிசுகளையும், கட்டண சலுகைகளையும் அறிவித்துள்ளது.

துபாய் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) ‘எமிரேட்ஸ் தொழிலாளர் சந்தை விருது’ (Emirates Labour Market Award) என்ற புதிய தேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் முக்கிய அம்சங்கள் 

நிறுவனங்களுக்கான சலுகைகள்:

சிறப்பான, ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்கி, தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டும் தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சகத்தின் சேவைக்கான கட்டணங்கள் (Ministry service fees) குறைக்கப்படும். இத்தகைய நிறுவனங்களுக்கு நாடு தழுவிய அளவில் நல்ல அங்கீகாரமும், மதிப்பும் வழங்கப்படும்.

ஊழியர்களுக்கான பரிசுகள்:

தங்களது வேலையில் திறமையாகவும், புதுமையாகவும் செயல்பட்டு, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் சிறந்த ஊழியர்களுக்கு AED   100,000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

தனியார் துறையை ஊக்குவிப்பது மற்றும் அங்குள்ள பணிச்சூழலை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது, ஊழியர்களின் நல்வாழ்வு, உற்பத்தித்திறன் (Productivity) மற்றும் வேலை செய்யும் இடத்தில் புதுமைகளை புகுத்துவது, சுதேசிமயமாக்கல் (Emiratisation) திட்டத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்வது ஆகிய நோக்கங்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

எப்படி தேர்வு செய்யப்படும்?

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபடும் நிறுவனங்கள் அடையாளம் காணப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் தொடங்கவுள்ளன. நிறுவனங்களின் செயல்திறன், புதுமை, தொழிலாளர் நலன் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TAGGED: