🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

Abu Dhabi Grand Prix 2026: மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்காக சிறப்பு பேக்கேஜ் டிக்கெட் விற்பனை தொடக்கம்

அபுதாபியின் புகழ்பெற்ற யாஸ் தீவு, மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ‘கிராண்ட் ப்ரீ பேக்கேஜ் 2026’ (Grand Prix Package 2026) திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அபுதாபி ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ பந்தயங்கள் 2026 டிசம்பர் 3 முதல் டிசம்பர் 6 வரை யாஸ் மரினா சர்க்யூட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த நான்கு நாட்களும் அதிவேக பந்தயங்களை நேரிலும், யாஸ் தீவின் முன்னணி ஹோட்டல்களில் தங்கி மகிழ்வும் ரசிகர்களுக்கு ‘கிராண்ட் ப்ரீ பேக்கேஜ் 2026’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

பேக்கேஜின் முக்கிய சிறப்பம்சங்கள்

  • ஃபார்முலா 1 பந்தயத்தின் பரபரப்பான தருணங்களை நேரடியாக பந்தய களத்தில் இருந்து கண்டு ரசிக்கும் வாய்ப்பு. 
  • யாஸ் தீவு முழுவதும் உள்ள பல்வேறு உலகத் தரமான பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்கலாம். 
  • யாஸ் தீவின் முன்னணி ஹோட்டல்களில் தங்கி சிறப்பான விடுமுறையை கழிக்கலாம். 
  • பந்தயங்களுக்குப் பிறகு நடைபெறும் உலகத் தரம் வாய்ந்த இரவு நேர இசைக் கச்சேரிகளில் (After-Race Concerts) பங்கேற்று மகிழலாம்.

நீங்கள் தேர்வு செய்யக்கூடிய டிக்கெட் பிரிவுகள்

ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பந்தயத்தை மிகச் சிறந்த கோணங்களில் இருந்து பார்ப்பதற்காக பல்வேறு டிக்கெட் பிரிவுகள் இந்த பேக்கேஜில் சேர்க்கப்பட்டுள்ளன.

  • Main Grandstand 
  • West Club 
  • West Grandstand
  • South Grandstand
  • North Grandstand 
  • North Straight Club
  • North Straight
  • Abu Dhabi Hill

இசை மழையில் நனையுங்கள்

பந்தய களத்தின் உற்சாகம் ஒருபுறமிருக்க, இந்த பேக்கேஜ்களில் புகழ்பெற்ற After-Race Concerts நிகழ்ச்சிகளுக்கான நுழைவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச பாப் நட்சத்திரங்களான Zara Larsson, Lewis Capaldi மற்றும் Imagine Dragons ஆகியோர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல முன்னணி கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

டிக்கெட் முன்பதிவு மற்றும் முழுமையான விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுவும்: https://www.abudhabigp.com/en/formula1/tickets-2026

TAGGED: