ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிஹாத் ரயில் (Etihad Rail) நிறுவனம், பயணிகள் ரயில்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் AED 100 முதல் AED 10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
அபராத விபரங்கள்
AED 200 அபராதம்
- ரயிலிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ குப்பை போடுவது.
- இருக்கைகளின் மீது கால்களை வைப்பது.
- டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது அல்லது தவறான டிக்கெட்டைப் பயன்படுத்துவது.
- அனுமதிக்கப்பட்ட வகுப்பை விட உயர் வகுப்பில் பயணம் செய்வது.
- அங்கீகரிக்கப்படாத இடங்களில் அமர்வது.
- ஊழியர்களின் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பது.
- போதையில் ரயில் நிலையத்திற்குள் வருவது அல்லது ரயிலில் மது அருந்துவது.
- டிக்கெட்டுகளை திருத்துவது அல்லது ஏமாற்ற நினைப்பது.
AED 500 அபராதம்:
- புகைபிடித்தல் அல்லது இ-சிகரெட் (E-cigarettes) பயன்படுத்துவது.
- மற்ற பயணிகளிடமோ அல்லது ஊழியர்களிடமோ வாக்குவாதம், அச்சுறுத்தல், கெட்ட வார்த்தைகள் பேசுவது மற்றும் எச்சில் துப்புவது.
- ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது அல்லது ரயில் நகரும் போது கதவைத் திறக்க முயல்வது.
- ரயிலை தாமதப்படுத்துவது.
- உரிய அனுமதியின்றி வணிக ரீதியான புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது.
AED 5,000 அபராதம்:
- ரயிலில் உள்ள பாதுகாப்பு உபகரணங்களை சேதப்படுத்துவது அல்லது அதில் முறைகேடு செய்வது.
- ரயிலுக்குள்ளேயோ, ரயிலில் இருந்தோ அல்லது ரயிலின் மீதோ பொருட்களை வீசி எறிவது.
- ரயில் தண்டவாளங்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைவது.
- ரயில்கள் அல்லது ரயில் நிலைய சொத்துக்களைச் சேதப்படுத்துவது
- முறையான காரணம் இல்லாமல் அவசரக்கால அலாரங்களை (Emergency Systems) இயக்குவது.
- அவசரக்கால வெளியேறும் வழிகளை (Emergency Exits) தேவையற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துவது.
