வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருடன் தமிழ் Buzz துபாய் இணை நிறுவனர் சந்திப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை!

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. க. தென்னரசு அவர்களை, தமிழ் Buzz துபாய் நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு. சுரேஷ் கண்ணன் அவர்கள் ஜூலை 28, 2026 அன்று  மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்தும், அவசர காலங்களில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின் போது, அமீரக வாழ் தமிழ்த் தொழிலாளர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கியக் சவால்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

குறிப்பாக அவசர நிலைகள் அல்லது எதிர்பாராத நெருக்கடி காலங்களில், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களைத் தாமதமின்றிப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள், அமீரகத்தில் பணியாற்றும் எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து கலந்துரையாடினர்.