துபாய் க்ரீக்கில் AED 80 மில்லியன் செலவில் 5,000 விளக்குகள் அமைக்க திட்டம்

துபாய் இளவரசரின் வழிகாட்டுதலின் கீழ், AED 80 மில்லியன் செலவில் துபாய் க்ரீக் பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. 

துபாயின் வரலாற்றுச் சிறப்புமிக்க துபாய் க்ரீக் பகுதியை உலகத் தரம் வாய்ந்த இரவு நேரச் சுற்றுலாத் தலமாக மாற்றும் நோக்கில், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 80 மில்லியன் AED 80 Million மில்லியன் மதிப்பிலான Dubai Creek Lights திட்டப் பணிகளை துபாய் நகராட்சி தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், துபாய் க்ரீக்கின் 8 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட நவீன விளக்குகள் நிறுவப்படவுள்ளன. அப்பகுதியின் பழமையான பாரம்பரியம், பண்பாடு மற்றும் தனித்துவமான கட்டிடக்கலை அழகை இரவில் மேலும் மிளிரச் செய்யும் வகையில் இந்த விளக்குகள் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

துபாய் க்ரீக்கை சுற்றி விளக்குகள் அமைக்கப்படும் 6 இடங்கள்

  • Creek Quay
  • Creek Promenade – Gold Souq
  • Creek entrance – Infinity Bridge
  • Al Shindagha Historic District
  • Bur Dubai Souq
  • Al Seef Marina

இந்த விளக்கு அமைப்பு கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், ஆற்றல் நுகர்வைக் குறைக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2027-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்திட்டம் குறித்து பேசிய துபாய் நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் மர்வான் அகமது பின் கலிதா, “Dubai Creek Lights திட்டம் துபாய் க்ரீக்கின் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் நகர்ப்புற அடையாளத்தையும் பிரதிபலிக்கும். மேலும், குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது ஒரு தனித்துவமான இரவு நேர அனுபவத்தை வழங்கும்,” என்று தெரிவித்தார்.

TAGGED: