துபாய் Global Village-ல் உணவகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் – முழு விவரம்

துபாய் குளோபல் வில்லேஜ் சீசன் 31-ல் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், Kiosks மற்றும் உணவு தள்ளுவண்டிகளை அமைக்க சிறு, குறு நிறுவனங்களுக்கான விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன.

துபாயின் புகழ்பெற்ற ‘குளோபல் வில்லேஜ்’ தனது 31வது சீசனுக்கான உணவு மற்றும் பானங்கள் (F&B) சார்ந்த தொழில்முனைவோர்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் உணவக நிறுவனங்கள் கடைகள் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. 

புதிய மற்றும் வளர்ந்து வரும் தனித்துவமான உணவு பிராண்டுகள், தொழில்முனைவோர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே பிரபலமாக உள்ள உணவகங்களும் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பாக இது அமைகிறது.

வழங்கப்படும் ஆதரவுகள்

பங்கேற்கும் நிறுவனங்களுக்கு குளோபல் வில்லேஜ் பின்வரும் முழுமையான உதவிகளை வழங்குகிறது. 

  • கடைகளுக்கான வடிவமைப்பு மற்றும் அமைப்புகள.
  •  ஊழியர்களுக்கான விசா மற்றும் இறக்குமதி பொருட்களுக்கான சுங்க நடைமுறைகளில் உதவி.
  • சேமிப்பு வசதிகள் மற்றும் வணிகப் பதிவு சேவைகள். 
  • மின்னணு கட்டண சாதனங்கள் மற்றும் சீசன் முழுமைக்குமான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள்.

பதிவுப் பிரிவுகள் மற்றும் தேதிகள்

Restaurants & Coffee Shops: ஆகஸ்ட்  7 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

Kiosks & Food Trolleys: ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட்  26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் மற்றும் முழு விவரங்களுக்கு: https://business.globalvillage.ae/