உங்கள் குறும்படத்திற்கு AED 30,000 வரை பரிசு! துபாய் RTA வழங்கும் மாபெரும் வாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க!

சாலை பாதுகாப்பு குறித்த ‘Road Safety Film Festival’ என்ற குறும்படப் போட்டியின் 2வது பதிப்பை RTA அறிவித்துள்ளது. 

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ‘Road Safety Film Festival’ என்ற குறும்படப் போட்டியின் 2வது சீசனை அறிவித்துள்ளது. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு, அவர்களின் பிரிவுக்குத் தகுந்தவாறு AED 30,000 வரை ரொக்கப் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

பங்கேற்கக்கூடிய 3 முக்கிய பிரிவுகள் 

  • தனிநபர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 
  • சமூகம் (Community) 
  • அரசு மற்றும் தனியார் அமைப்புகள்

பிரிவுகள் மற்றும் கருப்பொருள்கள்

தனிநபர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பிரிவுகள்

  • சாலைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்த சிறந்த விழிப்புணர்வு குறும்படம். 
  • நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்.

சமூகப் பிரிவில் (Community) போட்டியிடுபவர்களுக்கான பிரிவுகள்

  • குடும்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் சிறந்த சாலைப் பாதுகாப்பு குறும்படம். 
  • சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் மற்றும் பாதிப்புகளை மையமாகக் கொண்ட குறும்படம்.

அரசு மற்றும் தனியார் அமைப்புகள்

குறிப்பிட்ட பிரிவுகளில் போட்டியிடும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பைப் பாராட்டி கௌரவ விருதுகள் வழங்கப்படும்.

பரிசுத் தொகை விவரங்கள் (முதல் இரண்டு பிரிவுகள்) 

  • முதலிடம்: AED 30,000 
  • இரண்டாமிடம்: AED 20,000 
  • மூன்றாமிடம்: AED 10,000

முக்கிய தேதிகள் 

  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஆகஸ்ட் 24, 2026 
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 22, 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: RTA Road Safety Film Festival – Official Link

TAGGED: