ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை (செப்.5) வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (செப்.4)
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மதிய வேளையில் மீண்டும் மழைமேகங்கள் உருவாகி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்று மணிக்கு 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இரவு நேரத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால், சனிக்கிழமை அதிகாலையில் கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் பனிமூட்டம் (Mist) ஏற்படலாம்.
சனிக்கிழமை (செப்.5)
கிழக்கு பகுதிகளில் மதிய வேளையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை சற்று அதிகரிக்கும்.
இரவில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் ஞாயிறு காலை கடலோரப் பகுதிகளில் பனிமூட்டம் காணப்படலாம்.
ஞாயிறு (செப்.6) மற்றும் திங்கள் (செப்.7):
வானம் பொதுவாகத் தெளிவாகவோ அல்லது பகுதி மேகமூட்டத்துடனோ இருக்கும். மதிய வேளையில் கிழக்கு பகுதிகளில் மழை மேகங்கள் உருவாகலாம்.
காற்று மணிக்கு 35 கி.மீ வேகம் வரை வீசக்கூடும்.
அரபிக் கடல் மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சீராகவே இருக்கும்.
