அபுதாபிக்கான 30 நாள் இலவச விசாவை 11 அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மூலம் முன்பதிவு செய்யலாம்!

அபுதாபியின் இலவச விசாவைப் பெற விரும்பும் இந்திய சுற்றுலாப் பயணிகள், அங்கீகரிக்கப்பட்ட இந்த 11 எஜென்சிகள் மூலம் முன்பதிவு செய்யலாம்.

இந்தியப் பயணிகளைக் கவரும் நோக்கில், அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) ஒரு சிறப்புச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, தகுதியுள்ள இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அபுதாபிக்குச் சுற்றுலாச் செல்லும்போது, தோராயமாக AED  285 மதிப்புள்ள 30 நாட்கள் UAE சுற்றுலா விசா இலவசமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டம் 2026 ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 31 வரை சோதனை முயற்சியாக (Pilot Programme) செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாகச் சுமார் 20,000 விசாக்களுக்கு இந்தக் கட்டண விலக்கு சலுகை வழங்கப்பட உள்ளது.

11 அங்கீகரிக்கப்பட்ட பயண முகமைகள் 

இலவச விசாவைப் பெற பயணிகள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. அபுதாபி சுற்றுலாத் துறையுடன் இணைந்துள்ள பின்வரும் 11 அங்கீகரிக்கப்பட்ட பயண முகமைகள் அல்லது ஆன்லைன் சுற்றுலாத் தளங்கள் மூலமாக மட்டுமே சுற்றுலாப் பேக்கேஜை முன்பதிவு செய்ய வேண்டும். 

MakeMyTrip 

Thomas Cook & SOTC 

Thrillophilia 

Akbar Holidays 

Holiday Tribe 

Utazzo.com 

Kesari Tours 

Riya Travels 

Royal Tours 

PickYourTrail 

Aaryan Leisure

TAGGED: