அமீரகத்தில் வேலை செய்கிறீர்களா? உங்கள் Visa மட்டும் போதாது… Work Permit இல்லாமல் வேலை செய்ய முடியாது

அமீரகத்தில் வேலை செய்வதற்கு Residence Visa மட்டும் இருந்தால் போதாது. ஒருவர் எந்த வகையான வேலை செய்கிறார், எந்த விசாவில் இருக்கிறார், வேலையின் தன்மைக்கு  ஏற்ப சரியான Work Permit இருக்க வேண்டும்.

13 வகையான Work Permit 

வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வருபவர்கள் முதல் Family Visa-வில் இருப்பவர்கள், Freelancers, Golden Visa வைத்திருப்பவர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினருக்காக அமீரகத்தில் 13 வகையான Work Permit-கள் உள்ளன.

Overseas Work Permit

அமீரகத்திற்கு வெளியே இருக்கும் ஒருவரை நிறுவனம் வேலைக்கு அழைத்து வருவதற்கான Permit இது.

காலம்: 2 ஆண்டுகள்

Transfer Work Permit

ஏற்கனவே அமீரகத்தில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது இந்த Permit பயன்படுத்தப்படுகிறது.

காலம்: 2 ஆண்டுகள்

Family Sponsorship Work Permit

கணவர், மனைவி அல்லது பெற்றோரின் Sponsorship-ல் அமீரகத்தில் வசிப்பவர்கள், தேவையான Work Permit பெற்று நிறுவனத்தில் வேலை செய்யலாம்.

காலம்: 2 ஆண்டுகள்

Temporary Work Permit

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர், குறிப்பிட்ட காலத்திற்கு மற்றொரு நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரிய இந்த Permit உதவுகிறது.

Mission Work Permit

குறிப்பிட்ட Project அல்லது குறுகிய கால பணிக்காக வெளிநாட்டிலிருந்து ஊழியர்களை அமீரகத்திற்கு அழைத்து வர நிறுவனங்கள் இந்த Permit-ஐ பயன்படுத்தலாம்.

Part-time Work Permit

Full-time வேலைக்கு பதிலாக குறைந்த நேரம் அல்லது குறைந்த நாட்கள் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இது பயன்படும். MoHRE அனுமதியுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்யவும் முடியும்.

Juvenile Work Permit

15 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் குறிப்பிட்ட விதிமுறைகளுடன் வேலை செய்ய இந்த Permit வழங்கப்படுகிறது.

காலம்: 1 ஆண்டு

Student Training & Employment Permit

அமீரகத்தில் வசிக்கும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் Training அல்லது வேலை பெற இந்த Permit பயன்படுத்தப்படுகிறது.

காலம்: 3 மாதங்கள்

UAE/GCC Nationals Work Permit

UAE மற்றும் GCC நாடுகளின் குடிமக்களை வேலைக்கு நியமிக்க நிறுவனங்கள் பயன்படுத்தும் Permit இது.

காலம்: 2 ஆண்டுகள்

Golden Visa Holders Work Permit

Golden Visa மூலம் அமீரகத்தில் வசிப்பவர்கள், நிறுவனத்தில் வேலை செய்ய இந்த தனிப்பட்ட Work Permit பெறலாம்.

காலம்: 2 ஆண்டுகள்

National Trainee Work Permit

UAE Nationals-க்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற Training வழங்க நிறுவனங்கள் இந்த Permit-ஐ பயன்படுத்தலாம்.

காலம்: 12 மாதங்கள்

Freelance Work Permit

ஒரு நிறுவனத்தின் நிரந்தர ஊழியராக இல்லாமல், தனியாக பல நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு சேவை வழங்குபவர்களுக்கு இந்த Permit உதவுகிறது.

Private Teacher Work Permit

Private Tuition அல்லது தனிப்பட்ட வகுப்புகள் எடுப்பவர்களுக்கான Permit இது. தகுதியான ஆசிரியர்கள், ஊழியர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலம்: 2 ஆண்டுகள்

Work Permit இல்லாமல் வேலை செய்யலாமா?

செல்லுபடியாகும் Work Permit இல்லாமல் அமீரகத்தில் வேலை செய்வது சட்டவிரோதம். அதேபோல், சரியான Permit இல்லாமல் நிறுவனங்களும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த முடியாது.

Work Permit கட்டணம்

Work Permit வழங்க அல்லது புதுப்பிக்க AED 250 முதல் AED 3,450 வரை கட்டணம் இருக்கலாம். நிறுவனத்தின் MoHRE classification-ஐ பொறுத்து கட்டணம் மாறுபடும்.

Work Bundle மூலம் எளிதான நடைமுறை

Work Permit, Residence Visa, Medical Test, Fingerprinting, Emirates ID போன்ற வேலை தொடர்பான சேவைகளை ஒரே டிஜிட்டல் நடைமுறையில் செய்ய UAE Work Bundle உதவுகிறது.

இதன் மூலம் முன்பு இருந்த 15 படிகள் 5 ஆகவும், 16 ஆவணங்கள் 5 ஆகவும், செயல்முறை நேரம் 30 வேலை நாட்களில் இருந்து 5 வேலை நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Family Visa அல்லது Golden Visa-வில் இருப்பவர்கள், Residence Visa இருப்பதால் தானாக வேலை செய்யலாம் என்று நினைக்காமல், தங்களுக்குத் தேவையான Work Permit-ஐ உறுதி செய்துகொள்வது முக்கியம்.