துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் (Consulate General of India, Dubai) சார்பில், ‘சேவா பக்வாடா’ (Seva Pakhwada) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘விக்சித் பாரத் ரன் 2026’ (Viksit Bharat Run 2026) நடத்தப்பட உள்ளது.
இந்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்தியன் பீப்பிள்ஸ் போரம் (IPF) ஆகியவற்றுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை (Viksit Bharat) உருவாக்கும் உயரிய நோக்கத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சி வரும் 2026 செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06:30 மணிக்கு துபாயில் உள்ள பிரபலமான ஜபீல் பூங்காவில் (Zabeel Park) நடைபெறுகிறது.
துபாயில் வாழும் இந்தியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
