துபாயில் நடைபெறும் The RISE மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 700+ தமிழ் தொழிலதிபர்கள் பங்கேற்று, வணிக வாய்ப்புகளை உருவாக்க உள்ளனர்.
‘The RISE – Dubai Chapter’, தனது 17-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் வல்லுநர்கள் மாநாட்டை அறிவித்துள்ளது. இம்மாநாடு 2026 நவம்பர் 12 முதல் 14 வரை துபாயில் உள்ள மில்லினியம் பிளாசா டவுன்டவுன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச மாநாட்டில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ் தொழில்முனைவு, முதலீடு மற்றும் அறிவுப் பகிர்வுக்கான உலகளாவிய மையமாக துபாய் உருவெடுத்துள்ளது.
உலகளாவிய தமிழ் தொழில்களை ஒருங்கிணைத்தல்
‘The RISE – Dubai Chapter’ மாநாடு வெறும் அறிமுக சந்திப்பாக இல்லாமல், வர்த்தகம், முதலீடு, புதிய சந்தை வாய்ப்புகள், கொள்முதல் மற்றும் தொழில் கூட்டாண்மைகளை உருவாக்கும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா, அமீரகம், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஓமான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் தமிழ் தொழில் சமூகங்களை இணைப்பது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
இணைப்புகள் மூலம் வணிக வளர்ச்சி
இம்மாநாட்டின் முக்கிய அம்சமே திட்டமிட்டு நடத்தப்படும் B2B வர்த்தகச் சந்திப்புகள்தான். பங்கேற்பாளர்களின் தொழில்துறை, தயாரிப்புகள், சேவைகள், ஏற்றுமதி/இறக்குமதி மற்றும் முதலீட்டு விருப்பங்களை அறிந்து, அவர்களுக்குப் பொருத்தமான வணிகக் கூட்டாளிகளை இணைப்பதே இதன் நோக்கமாகும்.
1,000 திட்டமிட்ட B2B வர்த்தகச் சந்திப்புகள், 500 வணிக இணைப்பு அமர்வுகள் மற்றும் 100 முதலீட்டு அறிமுகங்களை நடத்துவதே இம்மாநாட்டின் முக்கிய இலக்காகும். அத்துடன், தமிழ்நாடு, அமீரகம் மற்றும் சர்வதேசச் சந்தைகளைச் சேர்ந்த 50 முன்னணி வணிகக் கண்காட்சியாளர்களைப் பங்கேற்க வைப்பதும் இதன் நோக்கமாகும்.”
தமிழூர் (THAMIZHOOR) – உலகத் தமிழர்களை இணைக்கும் பாலம்
‘The RISE – Dubai Chapter’ மாநாட்டின் முக்கிய அங்கமாக ‘தமிழூர்’ திகழும். உலகெங்கும் உள்ள தமிழ் தொழில்முனைவோர்கள், வல்லுநர்கள், அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்களை ஒரே தளத்தில் இணைத்து, அவர்கள் இணைந்து வளர்வதற்கான புதிய வாய்ப்புகளை இது உருவாக்கும்.
சர்வதேசக் கண்காட்சி, துறை சார்ந்த அரங்குகள் & தொழில் திட்ட அரங்கு
இம்மாநாட்டில் உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், பொறியியல், கட்டுமானம், தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கான சர்வதேசக் கண்காட்சி நடைபெறும். மேலும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு, வங்கி மற்றும் நிதி, தகவல் தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் உயர்கல்வி குறித்த சிறப்பு அமர்வுகளும் இடம்பெறும். இதன் ஒரு பகுதியாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைக்கும் ‘பிட்ச் ஃபெஸ்ட்’ (Pitch Fest) நிகழ்வும் நடத்தப்படும்.
உலகளாவிய தமிழ் பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்குதல்
எதிர்கால தலைமுறையினருக்குப் பயன்ளிக்கும் வகையில், உலகளாவிய தமிழ் பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே ‘The RISE’ அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இம்மாநாட்டில் ‘தமிழூர்’ அமைப்போடு இணைந்து தமிழ் மில்லியனர்ஸ் இன்டர்நேஷனல் (TMI), துபாய் தி ரைஸ் வர்த்தக மைய அலுவலகம், TAM-ONE, இம்பாக்ட் ஃபண்ட், பொட்டன் (POTAN), GCC – தமிழ்நாடு சுற்றுலா வழித்தடம் மற்றும் ANBIL ஆகிய முக்கியத் திட்டங்கள் முன்னிலைப்படுத்தப்படும்.
எல்லைகள் கடந்து இணைவோம்
“உலகெங்கிலும் உள்ள தமிழ் தொழிலதிபர்களையும் வல்லுனர்களையும் எல்லைகள் கடந்து இணைக்கும் நோக்கத்தோடு ‘The RISE’ அமைப்பு தொடங்கப்பட்டது. துபாயில் நடைபெறும் இந்த 17-வது உலக மாநாடு, இந்த உலகளாவிய தொடர்புகளை வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்முனைவுக்கான வாய்ப்புகளாக மாற்றுவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். ‘தமிழூர்’ போன்ற தளங்களின் மூலம் உலகத் தமிழர்களிடையே உறவுகளை வலுப்படுத்தி, ஒரு நிலையான பொருளாதார அமைப்பை உருவாக்குவதே எங்கள் முதன்மை இலக்காகும்” என்று ‘The RISE’ அமைப்பின் நிறுவனர் அருட்தந்தை முனைவர் ஜெகத் காஸ்பர் ராஜ் தெரிவித்துள்ளார்.
தேதி: 2026 நவம்பர் 12, 13 & 14
இடம்: மில்லினியம் பிளாசா டவுன்டவுன் ஹோட்டல், துபாய்
முன்பதிவு & தொடர்புகளுக்கு
இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் தொழிலதிபர்கள் மற்றும் வல்லுநர்கள் tamilrise.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
தொடர்பு எண்கள்:
திருமதி. ஸ்டெல்லா: +971 56 884 7804
திரு. அகஸ்டின்: +971 50 647 9003
திரு. அப்துல் காதர்: +971 52 937 2604
