ஷஹாத் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘Pradhama Drishtya Kuttakkar’. இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழா செப்டம்பர் 26-ஆம் தேதி மாலை 7:00 மணிக்கு துபாயில் உள்ள மேரியட் மார்க்விஸ் (Marriott Marquis) ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.
துபாய் வாழ் தொழிலதிபர் கண்ணன் ரவியின் KRG குழுமம் இந்நிகழ்ச்சியில் Title Sponser-ஆக இருந்தார். இந்நிகழ்வில் பார்வதி திருவோத்து, அஸீஸ், உன்னிமாயா, வினய் ஃபார்ட், விஜயராகவன், சித்தார்த் பரதன், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் நேரடியாகப் பங்கேற்றன.
இவ்விழாவில் நடிகை பார்வதி பேசுகையில், “இத்திரைப்படம் இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு வித்தியாசமான த்ரில்லர் அனுபவமாக இருக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
