இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ், இஷா, தனஸ்ரீ சுதாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘ஹபீபி’ (Habibi).
இப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் (Pre-release) நிகழ்ச்சி ஷார்ஜாவில் உள்ள நெஸ்டோ MIA மாலில் (Nesto MIA Mall), மே 23, 2026 அன்று நடைபெற்றது. நேசம் என்டர் டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் முத்து சுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
மேலும், அமீரகத்தில் வசிக்கும் ஏராளமான தமிழ் மக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃபுளூயன்சர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
KRG குரூப் திரு. கண்ணன் ரவி அவர்களின் முதன்மை அனுசரணையிலும் (Title Sponsor), பிளான் பி ஈவென்ட்ஸ் (Plan B Events) திருமதி. கலைவாணி அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு குளோபல் மீடியா ஹப் மற்றும் ஃபார்ச்சூன் ஃபைவ் ஜெனரல் டிரேடிங் (திரு. சுரேஷ் புன்னசேரில்) தங்களது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
KRG குரூப் திரு. கண்ணன் ரவி அவர்களின் முதன்மை அனுசரணையிலும் (Title Sponsor), பிளான் பி ஈவென்ட்ஸ் (Plan B Events) திருமதி. கலைவாணி அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு குளோபல் மீடியா ஹப் மற்றும் ஃபார்ச்சூன் ஃபைவ் ஜெனரல் டிரேடிங் (திரு. சுரேஷ் புன்னசேரில்) தங்களது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர். இந்நிகழ்வின் மீடியா பார்ட்னராக தமிழ் Buzz துபாய், ரேடியோ பார்ட்னராக கில்லி 106.5 FM பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வி.ஜே. ஐஸ்வர்யா, ஆர்.ஜே. மாயா ஆகியோர் பங்கேற்றனர்.
இதனிடையே பிஸ்மி மற்றும் கலைவாணி ஆகியோர் இணைந்து தொடங்கிய Plan B Events நிறுவனத்தின் லோகோ-வை துபாயைச் சேர்ந்த KR குழுமத் தலைவர் திரு. கண்ணன் ரவி, இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்து வெளியிட்டனர்.
