🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

துபாயில் நடைபெற்ற Patriot பட திரையிடல் நிகழ்ச்சி; நடிகர் மம்முட்டி பங்கேற்பு!

மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள ஒரு பிரம்மாண்டமான ஸ்பை-திரில்லர் திரைப்படம் தான் பேட்ரியாட் (Patriot).

“PATRIOT” திரைப்படத்தின் சிறப்பு காட்சி, மே 2-ஆம் தேதி தெய்ரா சிட்டி சென்டர் மாலில் உள்ள வோக்ஸ் சினிமாஸில்  திரையிடப்பட்டது.  மலையாள மற்றும் தமிழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகன் மம்முட்டி வருகை தந்தார்.  

அப்போது அவர் திரையரங்கிற்குள் நுழையும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன்  வரவேற்றனர். அவர் ரசிகர்களுக்கு கை அசைத்தும், அவர்களுடன் செல்ஃபி எடுத்தும் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

மம்மூட்டியை வரவேற்க கேரளாவின் பாரம்பரிய  செண்டை மேளம் முழங்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பின் மம்முட்டி ரசிகர்கள் கலந்துரையாடினார்.

தொடர்புக்கு: வோக்ஸ் சினிமாஸ்

TAGGED: