அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்; மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்!

மே 4 அன்று ஈரானில் இருந்து ஏவப்பட்ட 12 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 3 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 4 ட்ரோன்களை அமீரக வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக தடுத்து அழித்ததாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த போதிலும், மீண்டும் ஏவுகணைகள் கண்டறியப்பட்டதால் அமீரகத்தின் அவசர எச்சரிக்கை அமைப்பு (Emergency Alert System) அன்று இரண்டு முறை ஒலிக்கப்பட்டது.  

இதுவரையிலான மொத்த பாதிப்புகள்

ஈரான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களில், அமீரக வான் பாதுகாப்புப் படை இதுவரை 549 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 29 க்ரூஸ் ஏவுகணைகள், 2,260 டிரோன்களை எதிர்கொண்டுள்ளது. 

காயங்கள் மற்றும் உயிரிழப்புகள்:

இதுவரை தாக்குதலில் இடைமறிப்பின் போது விழுந்த சிதறல்களால் ஏற்பட்ட விபத்துகளால் மொத்தம் 227 பேர் காயமடைந்துள்ளனர். 

இதில் அமீரகத்தினர் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.  

இதில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அமீரக ஆயுதப்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் மற்றும்   மொராக்கோவைச் சேர்ந்த ஒரு ஒப்பந்த ஊழியர் உள்பட இந்தியா பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பாலஸ்தீனம் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 பேர்  உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றம்:

இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, மே 5 முதல் மே 8 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் கல்விக்கு மாற்றப்படுவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

TAGGED: