உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, தனது பிரபலமான LED முகப்பில் காட்சிப்படுத்தப்படவுள்ள புதிய Projection Design-ஐ உருவாக்க, உலகில் உள்ள கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கான அழைப்பை அறிவித்துள்ளது.
யார் பங்கேற்கலாம்?
அமீரகத்தில் வசிக்கும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கலைஞர்கள், கிராபிக்ஸ் டிசைனர்கள், அனிமேட்டர்கள், டிஜிட்டல் கலைஞர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட யாரேனும் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இதில் பங்கேற்கலாம். Emaar நிறுவன ஊழியர்கள் மற்றும் போட்டி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில பிரிவினருக்கு இதில் பங்கேற்க அனுமதி இல்லை.
என்ன சமர்ப்பிக்க வேண்டும்?
பங்கேற்பாளர்கள், அதிகபட்சம் 3 நிமிடங்கள் ஓடும் அசல் Projection Design அல்லது Animation-ஐ உருவாக்க வேண்டும். அந்த வடிவமைப்பு துபாயின் படைப்பாற்றல், புதுமை மற்றும் எதிர்கால பார்வையை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதனுடன், வடிவமைப்பின் பின்னணியை விளக்கும் சுருக்கமான கருத்து விளக்கமும் இணைக்கப்பட வேண்டும்.
வெற்றியாளருக்கு என்ன கிடைக்கும்?
தேர்வு செய்யப்படும் வடிவமைப்பு, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் LED முகப்பில் காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பை கலைஞர்கள் பெறுவார்கள்.
முக்கிய தேதிகள்
போட்டி தொடக்கம்: 8 ஜூலை 2026
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18 ஆகஸ்ட் 2026
எப்படி விண்ணப்பிப்பது?
போட்டிக்கான விதிமுறைகள், தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு தகவல்களையும் புர்ஜ் கலீஃபாவின் www.burjkhalifa.ae/open-call/ பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
