வயிறு குலுங்க சிரிக்க… துபாயில் நடைபெறவுள்ளது பிரவீன் குமாரின் “நானும் Foody தான்” காமெடி நிகழ்ச்சி!

நகைச்சுவை ரசிகர்களை மகிழ்விக்க, பிரபல நகைச்சுவை கலைஞர் பிரவீன் குமாரின் “நானும் Foody தான்” என்ற தமிழ் ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சி வரும் நவம்பர் 14 சனிக்கிழமை அன்று துபாயில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி துபாயின் Oud Metha பகுதியில் உள்ள Glendale International Schoolல் நடக்கவுள்ளது. இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியை, தமிழ் Buzz துபாயின் தொகுப்பாளினி RJ மாயா தொகுத்து வழங்கவுள்ளார். 

குடும்பத்துடன் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் முற்றிலும் குடும்ப பாணியில் (Family Friendly) உருவாகியுள்ள இந்நிகழ்ச்சி, குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. 90 நிமிடங்கள் நீடிக்கும் இந்நிகழ்ச்சிக்கு ‘தமிழ் Buzz துபாய்’ Media Partner ஆக செயல்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் Title Sponsor ஆக எஸ்.எஸ். பக்கெட் பிரியாணி (SS Bucket Biryani) நிறுவனமும்,  Associate Partner ஆக ருகுன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் (Rukun Group of Companies) நிறுவனமும், Supporting Partner ஆக சென்னை குல்ஃபி (Chennai Kulfi) நிறுவனமும் பங்கேற்கின்றன.

இந்நிகழ்ச்சியின் முன்னெடுப்பில் எஸ்.எஸ். பக்கெட் பிரியாணி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், ருகுன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திஇராபின்சன் மற்றும் சென்னை குல்ஃபி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  ஜே. சாதிக் பாட்ஷா ஆகியோர் முதன்மைப் பங்காற்றியுள்ளனர்.

இதர தகவல்கள்:

ஊத் மேத்தா மெட்ரோ நிலையம் மற்றும் துபாய் ஹெல்த்கேர் சிட்டி மெட்ரோ நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன. பேருந்தில் வருவோர் வாஃபி சிட்டி 1, ஊத் மேத்தா ரோடு மற்றும் அமெரிக்கன் ஹாஸ்பிடல் பேருந்து நிறுத்தங்களைப் பயன்படுத்தலாம்.

அரங்கத்திற்கு வெளியே RTA பார்க்கிங் வசதிகள் உள்ளன. அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகளும், சிற்றுண்டி/குடிநீர் (Refreshments) விற்பனை அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் (Tickets) Q-Tickets.com இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

TAGGED: