அபுதாபியில் புதிய Blue நம்பர் பிளேட்… யாருக்காக தெரியுமா?

அபுதாபியில் Self-Driving கார்களுக்கு நீல நிற நம்பர் பிளேட்டுகளை Abu Dhabi Mobility அறிமுகப்படுத்தியுள்ளது.

அபுதாபி சாலைகளில் இயங்கும் சுயவிவர Self-Driving கார்களை எளிதாக அடையாளம் காணும் வகையில், அதற்கான பிரத்யேக நம்பர் பிளேட்டை அபுதாபி முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் Smart and Autonomous Systems Council மேற்பார்வையில், Abu Dhabi Mobility இந்த புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அபுதாபியில் தானியங்கி போக்குவரத்துச் சேவைகளை பாதுகாப்பாக விரிவுபடுத்துவதுடன், அவற்றின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளையும் மேலும் வலுப்படுத்த முடியும் என்று Abu Dhabi Media Office (ADMO) தெரிவித்துள்ளது.

இரண்டு வகையான நம்பர் பிளேட்டுகள்:

Commercial Services: பொதுமக்களுக்கு வணிக ரீதியாக சேவை வழங்கும் தானியங்கி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் “Auto Drive” என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். 

Testing: சோதனை மற்றும் ஆரம்பகட்ட திட்டங்களுக்காக இயக்கப்படும் தானியங்கி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் “Test” என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.

இந்த இரண்டு வகையான நம்பர் பிளேட்டுகளும் மற்ற சாதாரண வாகனங்களில் இருந்து எளிதில் வேறுபடுத்தி பார்க்கும் வகையில், ஒரு தனித்துவமான நீல நிற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். 

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில், இந்தத் தானியங்கி கார்களின் செயல்பாட்டுத் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யவும், அதற்கேற்ப புதிய கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மேம்படுத்தவும் இந்த முயற்சி பெரிதும் துணையாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்கால போக்குவரத்தை நோக்கி அபுதாபி எடுத்து வைத்துள்ள மிக முக்கியமான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.