ஷாப்பிங் பிரியர்களே ரெடியா? 60 நாட்கள் அதிரடி சலுகைகளுடன் ‘Dubai Summer Surprises’ வருகிறது!

வருடாந்திர ‘Dubai Summer Surprises’ திருவிழா, வருகிற ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது. 

துபாயில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற திருவிழாவான துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS) இந்த ஆண்டும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள், அதிரடித் தள்ளுபடிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் இந்த விழா களைகட்டவுள்ளது.

இந்த ஆண்டு, ஜூலை 2, வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 60 நாட்களுக்கு இந்தத் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய முக்கிய அம்சங்கள்

  • துபாயின் புகழ்பெற்ற Beat The Heat DXB கச்சேரி மீண்டும் வருகிறது. ஆகஸ்ட் 28 அன்று கோகோ கோலா அரேனாவில் Miami Musical Show நடைபெறுகிறது.
  • கடந்த ஆண்டு மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற Summer Mallathon இந்த ஆண்டும் நடைபெறுகிறது.
  • இந்த திருவிழாவில் பங்கேற்கும் உணவகங்களில் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சிறப்பு சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படும். 
  • துபாயில் உள்ள பல்வேறு மால்களில் நடைபெறும் Great Dubai Summer Sale விற்பனையில் பிராண்டட் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
  • பள்ளித் திறப்பை முன்னிட்டு, Back to School சிறப்புத் தள்ளுபடி விற்பனை ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறவுள்ளது. இதில் பள்ளி உபகரணங்களை மக்கள் சலுகைகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.