DXBக்கு விருது முதல் 4 பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்காது வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

4 பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்காது

அக்டோபர் 22, 2026 முதல் 12 மையங்களிலேயே பாஸ்போர்ட் மற்றும் விசா சேவை வழங்கப்படும். நிர்வாகக் காரணங்களால் Musaffah, Al Reem Island, Dubai Investment Park-I, Sharjah Al Majaz ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 மையங்களின் சேவைகள் நிறுத்தப்படுகின்றன. 

அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட், விசா மற்றும் சான்றளிப்பு சேவைகள் தற்போது அல் ஹிந்த் டூர்ஸ் & டிராவல்ஸ் (Al Hind Tours & Travels) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  அக்டோபர் 22, 2026 முதல், அமீரகம் முழுவதும் கீழே குறிப்பிட்டுள்ள 12 இந்திய தூதரக சேவை மையங்கள் (ICACs) தொடர்ந்து இயங்கும். 

தொடர்ந்து இயங்கும் 12 மையங்கள் (ICACs):

அபுதாபி

  • ICAC 1 – Al Danah: Al Ghaith Tower, 1205 Hamdan Bin Mohammed Street, Al Danah, Zone 1, Abu Dhabi.
  • ICAC 2 – Al Ain: Building No 14, Street No 1 – 163 Abdullah Bin Dhahir Al Muhairi St – Al Khibeesi – Al Ain, Abu Dhabi.
  • ICAC 3 – Madinat Zayed, Al Dhafra: Madinat Zayed-Building #55, Bada Zayed, Abu Dhabi.
  • ICAC 4 – Ghayathi: Office #G15-16, Ghayathi Mall, Al Dhafra Region, Abu Dhabi.

துபாய் மற்றும் வடக்கு அமீரகம்  

  • ICAC 5 – Bur Dubai: UW mall Al Mankhool, Khalid Bin Al Waleed Rd, 317- 11B Street, Bur Dubai, Dubai.
  • ICAC 6 – Sharjah: Indian Association Building – Al Estiqlal St – Al Manakh – Hay Al Qasimiah – Sharjah.
  • ICAC 7 – Ajman: Indian Association Ajman, Sheikh Mohammed bin Rashid Al Maktoum Rd – Al Jerf Industrial 3 – Ajman.
  • ICAC 8 – Umm Al Quwain: Indian Association, Al Neefah – Al Ramlah 2 – Umm Al-Quwain.
  • ICAC 9 – Ras Al Khaimah: Indian Relief Committee, Al Mamourah Rd – Al Mamourah – Ras Al Khaimah.
  • ICAC 10 – Fujairah: Indian Social Club, Al Faseel, Fujairah.
  • ICAC 11 – Kalba: Indian Social & Cultural Club, Al Taraif 5, Kalba, Sharjah.
  • ICAC 12 – Khor Fakkan: Room 203, Bridi 670 Zarouni Building, Shk Khalid Road, Sharjah.

புஜைராவிற்கு ஒரு நாளைக்கு ஒரு Etihad  ரயில்

துபாயில் இருந்து புஜைராவிற்கு, Etihad Rail மூலம் 1 மணி 10 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும். ஆனால், தற்போதைக்கு ஒரு நாளைக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே, ஒரே நாளில் சென்று திரும்பும் பயணத்தை விட, அங்கு தங்கி வரத் திட்டமிடுபவர்களுக்கு இந்த ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துபாய் ➔ ஃபுஜைரா:
– புறப்படும் நேரம்: பிற்பகல் 1:57
– சென்றடையும் நேரம்: பிற்பகல் 3:07

ஃபுஜைரா ➔ துபாய்:
– புறப்படும் நேரம்: முற்பகல் 11:54
– சென்றடையும் நேரம்: பிற்பகல் 1:04

Etihad ரயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் (etihadrail.ae) அல்லது அவர்களின் Appல் டிக்கெட்டை பெறலாம்.

துபாய் ஏர்போர்ட்டுக்கு விருது

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) ‘Red Carpet’ திட்டத்திற்கு, துபாய் இளவரசர் ‘Dubai it’ விருதை அறிவித்துள்ளார். உலகின் அதிவேக Immigration Process சேவையாகக் கருதப்படும் இத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பயோமெட்ரிக் தொழில்நுட்பம் மூலம் பயணிகளின் Immigration Process வெறும் 5 வினாடிகளுக்குள் நிறைவடைகிறது.

முதல் ‘Free-Range’ சான்றிதழ் 

அரசின் அனைத்து விதிமுறைகளையும் சரியாகப் பின்பற்றியதற்காக, ஷார்ஜாவில் உள்ள Fili கோழிப் பண்ணை அமீரகத்தின் முதல் ‘Free-Range’ சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்தப் பண்ணையில், ஷார்ஜா ஆட்சியாளர் பிரத்யேகமாக தயாரிக்கும் இயற்கைத் தீவனம் கோழிகளுக்கு வழங்கப்படுகிறது.

TAGGED: