அமீரக தொழிலாளர் சட்டப்படி, 15 வயதுக்கு குறைவான குழந்தைகளை வேலைக்கு அமர்த்த அனுமதி இல்லை. ஆனால், 15 முதல் 18 வயது வரை உள்ளவர்கள், Ministry of Human Resources and Emiratisation (MoHRE) வழங்கும் அதிகாரப்பூர்வ வேலை அனுமதியுடன் வேலை செய்யலாம்.
வேலை செய்ய வேண்டிய நிபந்தனைகள்:
- பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ அனுமதி அவசியம்.
- உடல்நலத் தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்.
- ஒரு நாளில் 6 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது.
- இரவு நேர வேலை, கூடுதல் நேர வேலை மற்றும் சில குறிப்பிட்ட தொழில்களில் பணிபுரிய அனுமதி இல்லை.
- மொத்தம் குறைந்தது 1 மணி நேர இடைவேளை இருக்க வேண்டும். தொடர்ந்து 4 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதி இல்லை.
- கல்வி பாதிக்காத வகையில் வேலை நேரம் இருக்க வேண்டும்.
- உடல் நலம், பாதுகாப்பு அல்லது ஒழுக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான வேலைகளில் பணியமர்த்த கூடாது.
மேலும், சிறார்களின் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்ய, அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அமீரகம் தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
